For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Go..go man!.."பானு"வை நிச்சயம் "சக்தி" மிஸ் செய்வார்! #Gautami

தேவர் மகன் படத்தில் கமல்ஹாசனுக்குப் போட்டியாக நடிப்பில் கலக்கியிருப்பார் கெளதமி.

Google Oneindia Tamil News

சென்னை: தேவர் மகன் படத்தின் முக்கிய காட்சி இது. கெளதமியும், கமல்ஹாசனும் சம்பாஷிக்கும் உணர்ச்சிகரமான உரையாடல் இது. கெளதமியின் நடிப்பு இதில் வெகுவாகப் பேசப்பட்டது.

தேவர் மகனில் கெளதமி வந்த அத்தனைக் காட்சியிலும் அசத்தியிருப்பார். சிவாஜியுடன் இடம் பெறும் காட்சியாகட்டும், கமல்ஹாசனுடன் மல்லுக்கட்டும் காட்சியிலும் சரி பின்னியிருப்பார்.

மெச்சூரிட்டியான கெளதமியின் நடிப்பை இதில் பார்த்து வியந்த ரசிகர்களுக்கு, கெளதமியின் நடிப்பு நல்ல திருப்தியைக் கொடுத்தது என்பதில் சந்தேகம் இல்லை.

ஓய் சக்தி ஓய்..!

சக்தி தன்னை ஏமாற்றியதை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் துடித்துத், தவித்து, விரக்தி பொங்க கோபாவேசமாக கெளதமி பேசும் இந்த வசனமும் சரி, அவர் வெளிப்படுத்திய நடிப்பும் சரி ரசிகர்களின் பாராட்டுக்களை மொத்தமாக வாரிக் கொண்டது.

சிவாஜியுடன் பானு

இதில் சிவாஜி, கமல்ஹாசனுடன் வருவார் கெளதமி. அவர் வரும் விதம், உட்காரும் விதம், சிவாஜியின் ரியாக்ஷன், கெளதமியை கமல்ஹாசன் அறிமுகம் செய்யும் காட்சி. அதற்கு கெளதமி காட்டும் முக பாவனை எல்லாமே.. கலக்கல்.

சாந்துப் பொட்டு.. சந்தனப்பொட்டு

கிராமத்தை சுற்றிப் பார்க்க காதலனுடன் போகும் கெளதமி சந்திக்கும் கிராமத்து சிக்கல்கள், சுவாரஸ்யங்கள், மோதல்கள்.. கிராமத்து சண்டையில் காதலனை ரசிப்பது என கலவையாக கலக்கியிருப்பார் கெளதமி இதில்.

மறக்க மனம் கூடுதில்லையே

சக்தியின் மனைவியை உட்கார வைத்து பானு உரையாடும் காட்சி. காதலனின் மனைவியுடன் அவர் பேசும் இந்தக் காட்சி, சக்தியின் மனைவியின் வெகுளித்தனத்தை ரசிப்பது, அவர் பாடும்போது காதலனின் நினைவு வந்து ஸ்தம்பிப்பது என கலவையான உணர்ச்சிகளைக் கொட்டியிருப்பார் கெளதமி.

நிச்சயம் கமல், கெளதமியை மிஸ் செய்வார் என நம்பலாம்!

English summary
Thevar Magan was the mater piece movie for both Kamal Haasan and Gowthami's cinema carrier. Gowthami had excelled in acting in the movie as Bhanu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X