For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலீஸில் காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம்.. குதிரைக்காரரை கொல்ல முடியாமல் குதிரை கழுத்தை அறுத்த திருடன்!

சென்னையில் போலீஸிடம் காட்டிக்கொடுத்த குதிரைக்காரரை திருடன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: போலீஸிடம் காட்டிக்கொடுத்த குதிரைக்காரரை திருடன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார்களில் உள்ள பொருள்களை திருடுவதும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை திருடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதேபோல் வழிப்பறி, சங்கிலி அறுப்பு உள்ளிட்ட சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்கள் சில நேரங்களில் கொலையிலும் கொண்டு முடித்து விடுகின்றன.

காரை உடைத்து திருட முயற்சி

காரை உடைத்து திருட முயற்சி

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து கடந்த 24ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் திருட முயன்றார்.

போலீஸ் எச்சரிக்கை

போலீஸ் எச்சரிக்கை

இதனைக்கண்ட குதிரை சவாரி ஏற்பாட்டாளர் அவரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து அந்த நபரை விசாரித்ததோடு கடுமையாக எச்சரித்தும் அனுப்பினர் போலீசார்.

குதிரைக்காரரின் வீட்டில்

குதிரைக்காரரின் வீட்டில்

இதனால் தன்னை போலீஸிடம் காட்டிக்கொடுத்த அந்த குதிரைக்காரர் மீது ஆத்திரத்தில் இருந்தான் திருடன். அந்த குதிரைக்காரரை கொலை செய்ய திட்டம் தீட்டிய திருடன் குதிரைக்காரரின் வீட்டிற்கு சென்றுள்ளான்.

குதிரையின் கழுத்து அறுப்பு

குதிரையின் கழுத்து அறுப்பு

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் ஆத்திரமடைந்த திருடன் எப்படியாவது குதிரைக்காரரை பழிவாங்க எண்ணினான். இதற்காக வீட்டு வாசலில் கட்டப்பட்டிருந்த குதிரையின் கழுத்தை அறுத்துள்ளான்.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

இதில் படுகாயமடைந்த குதிரை கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. போலீஸிடம் காட்டிக்கொடுத்ததால் குதிரைக்காரரை திருடன் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Thief tried to kill horse rider in Chennai. On June 24th a horse rider informed police about a thief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X