For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. 23ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர் நீதிமன்ற 3வது நீதிபதி முன்பு இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு நீதிபதி சத்யநாராயணன் ஒத்தி வைத்தார். 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை தினமும் வழக்கு விசாரணை நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆளுநரிடம் மனு அளித்தனர். இதையடுத்து வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newest First Oldest First
8:23 PM, 4 Jul

தமிழகத்தில் பயங்கரவாதத்தை அடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

எந்த துறையிலும் சல்லிக்காசு கூட ஊழல் செய்யாத அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி

6:58 PM, 4 Jul

ஒரே நேரத்தில் சட்டசபை, நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை

சட்ட திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்

தலைமை தேர்தல் ஆணையர் ராவத் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி

6:22 PM, 4 Jul

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

5:07 PM, 4 Jul

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் விடுதலை

1991-96ம் ஆண்டு ஜெ. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தனன்

சொத்து குவிப்பு வழக்கில் கடலூர் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது

சிறை தண்டனையை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்துள்ளது
4:16 PM, 4 Jul

தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஜூலை 23ம் தேதி முதல் 27ம் தேதிவரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும்

3:56 PM, 4 Jul

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை துவங்கியது

ஹைகோர்ட் 3வது நீதிபதி முன்னிலையில் விசாரணை தொடக்கம்

2:33 PM, 4 Jul

ஆம் ஆத்மி தலைவர் வசீகரன் வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்

சேலம் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்

இன்று அதிகாலையில் சென்னையில் கைது செய்யப்பட்டார் வசீகரன்

வசீகரன் மீது ஜாமீனில் வெளி வர முடியாத 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

2:10 PM, 4 Jul

தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் பட்டாசு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 11 பேர் பலியான சோகம்

2:08 PM, 4 Jul

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமனம்

காங். துணை தலைவராக ஈஸ்வர் கண்ட்ரே நியமனம்

காங். தலைவராக இருந்த பரமேஷ்வர் துணை முதல்வரானதால் புதிய உத்தரவு

1:16 PM, 4 Jul

துணை நிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

டெல்லி அரசு தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மேற்கோள்காட்டி நாராயணசாமி பேட்டி

12:59 PM, 4 Jul

நெல்லுக்கான ஆதரவு விலை ரூ.200 அதிகரிப்பு

குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

சோளத்துக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.275 அதிகரிப்பு

சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.250 அதிகரிப்பு

10:55 AM, 4 Jul

டெல்லியில் ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை- உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிரடி
10:53 AM, 4 Jul

டெல்லியில் யாருக்கு அதிகாரம்? உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லியில் அதிகாரம் பெற்றவர் துணை நிலை ஆளுநரா, முதல்வரா என வழக்கு

துணை நிலை ஆளுநர்-முதல்வர் இணைந்து செயல்பட வேண்டும்- உச்சநீதிமன்றம்

10:40 AM, 4 Jul

ரவுடி ஆனந்தன் என்கவுன்டர்: மாஜிஸ்திரேட் விசாரணை ஆரம்பம்

நீதிபதி சாண்டில்யன் என்கவுண்டர் பற்றி விசாரிக்க உள்ளார்

என்கவுண்டர் சம்பவங்களின்போது நீதி விசாரணை நடப்பது வழக்கமான நடைமுறை

7:46 AM, 4 Jul

18 எம்.எல்.ஏ.க்களின் தகுது நீக்க வழக்கு 3வது நீதிபதி முன்பு இன்று விசாரணை

நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இன்று விசாரணை

English summary
Third judge M. Sathyanarayanan is going to hear the 18 MLAs disqualification case after split verdict given by two judges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X