For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் கல்வீச்சில் பலியான தமிழக இளைஞர் உடல் வருகை.. தனி விமானம் மூலம் சென்னை வந்தது

காஷ்மீர் கல்வீச்சில் பலியான இளைஞர் திருமணியின் உடல் விமானம் மூலம் சென்னை வந்தது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை இளைஞர் குடும்பத்திடம் காஷ்மீர் முதல்வர் உருக்கம்-வீடியோ

    சென்னை: ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்வேலு. இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான வாகன கிடங்கில் பணியாற்றி வருகிறார்.

    சென்னை: ஆவடி அருகே உள்ள பாலவேடு பகுதியை சேர்ந்தவர் ராஜ்வேலு. இவர் ஆவடியில் உள்ள மத்திய பாதுக்காப்பு துறைக்கு சொந்தமான வாகன கிடங்கில் பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கோடைக் காலத்தையொட்டி தனது மனைவி செல்வி, மகள் சங்கீதா மற்றும் இரண்டாவது மகன் திருமணி செல்வம் ஆகியோர் சுற்றுலா சென்றுள்ளனர்.

    கடந்த 4ஆம் தேதி ரயில் மூலம் டெல்லி சென்ற ராஜ்வேல் குடும்பத்தினர் அங்கிருந்து விமானம் ஸ்ரீநகர் சென்று பின்னர் ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளனர். அங்கு குல்மார்க் என்ற இடத்தை சுற்றி பார்க்க ராஜ்வேல் குடும்பம் உட்பட 7 குடும்பத்தினர் பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர்.

    காஷ்மீர் கல்வீச்சு

    காஷ்மீர் கல்வீச்சு

    அப்போது புட்காம் மாவட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பேருந்து மீது கற்கள் வீசப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த ராஜ்வேலுவின் மகன் திருமணி செல்வம் மற்றும் அவரது தாய் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    திருமணி செல்வம் பலி

    திருமணி செல்வம் பலி

    இதை அடுத்து அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமணி செல்வம் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். உயிர் இழந்த திருமணி செல்வத்திற்கு திருமணம் ஆகவில்லை.

    விமானம் மூலம்

    விமானம் மூலம்

    அவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதனிடையே திருமணி செல்வத்தின் உடலை பாதுகாப்பு துறை அதிகாரிகளின் உதவியுடன் ஸ்ரீநகரில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வர திட்டமிடப்பட்டது.

    உடல் சென்னை வருகை

    உடல் சென்னை வருகை

    அதன்படி விமானம் மூலம் திருமணியின் உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. திருமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அப்பகுதி மக்கள் அவரது வீட்டில் குவிந்துள்ளனர்.

    மக்கள் சோகம்

    மக்கள் சோகம்

    முன்னதாக ஆவடி வட்டாட்சியர் மதன் குப்புராஜ் தலைமையிலான வருவாய் துறையினர் திருமணி செல்வம் வீட்டிற்கு வந்து திருமணியின் சகோதரர் ரவி குமாரிடம் தகவல்களை சேகரித்தனர். காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Young man Thirumani Selvam body arrived to Chennai. Thirumani Selvam killed in Kashmir by stone pelting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X