For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருத்ததோடு தான் திமுக கூட்டணியில் இருக்கிறோம்-இடதுசாரிகளும் வர வேண்டும்: திருமாவளவன்

|

சென்னை: மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக, வருத்தம் இருந்தாலும் தி.மு.க. கூட்டணியை ஏற்றுக் கொள்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் இடதுசாரிகள் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி'யில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தையில் கடந்த சில நாட்களாக இழிபறி நீடித்தது.

இந்நிலையில் நேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கியது திமுக. அதற்கான பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் செய்தியாளார்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தொல்.திருமாவளவன் அளித்த பதில்களாவது :-

இடதுசாரிகளுக்கு அழைப்பு...

இடதுசாரிகளுக்கு அழைப்பு...

கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது?

பதில்: நாங்கள் 5 தொகுதிகளை கேட்டோம். அதில் 3 தொகுதிகளை எதிர்பார்த்தோம். கடைசியாகவும், இறுதியாகவும் 2 தொகுதிகளை கேட்டு வற்புறுத்தினோம். எனினும் சிதம்பரம் என்ற ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதில் கவனமாகவும், அக்கறையாகவும் இருக்கிறோம். மேலும் பலமுனைபோட்டி இருப்பதால் வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும், இந்த முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்த நேரத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர இடதுசாரி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கிறேன்.

மதவாத கட்சிகளுக்கு எதிராக...

மதவாத கட்சிகளுக்கு எதிராக...

கேள்வி: நீங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் இருக்கிறதா?

பதில்: தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்து பல தேர்தல்களை சந்தித்து உள்ளோம். இந்த உறவின் அடிப்படையில் உரிமையோடு, 5 தொகுதிகளை கேட்டோம். தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியதையடுத்து, வருத்தம் இருந்தாலும் இந்தியாவை காப்பாற்றவும், சமூக நீதி மற்றும் மதசார்பின்மையை காக்கவும் இந்த கூட்டணியை ஏற்றுக்கொள்கிறோம்.

வருத்தம் இல்லை....

வருத்தம் இல்லை....

கேள்வி: 15 ஆண்டுகளாக அரசியல் களத்தில் நிற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் கொடுத்தது வருத்தம் அளிக்கவில்லையா?

பதில்: அந்த வருத்தம் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இல்லை.

வெற்றி வாய்ப்பு...

வெற்றி வாய்ப்பு...

கேள்வி: தற்போது உள்ள தி.மு.க. கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலை போன்று மாபெரும் வெற்றி பெறுவோம். அடுத்த பிரதமர் யார்? என்பதை தீர்மானிக்கும் கட்சியாக தி.மு.க. தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி' திகழும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Viduthalai Siruthaikal chief Thirumavalavan was disappointment wuth the DMK alliance, as they were given only one lok sabha seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X