For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தியாகு உண்ணாவிரதத்திற்கு திருமாவளவன் ஆதரவு - ஒருநாள் உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

Thirumavalavan supports Thiyagu fast
சென்னை: இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்ததப்பட்டால் அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகுவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் ஆதரவு தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு 01-10-2013 முதல் உயர்நீதிமன்ற அனுமதியுடன் தனது கோரிக்கை நிறைவேறும் வரை அல்லது சாகும் வரை உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் காமன்வெல்த்-எதிர்ப்பியக்கத்தின் சார்பில் இப்போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டைத் தடுக்கவேண்டும் அல்லது அதில் இந்தியா பங்கேற்க்காமல் தவிர்க்க வேண்டும்;

சிங்கள அரசுக்கு இந்தியா போர்கப்பல்களை வழங்கக்கூடாது; இந்தியாவிலிருந்து கடல்அடி கம்பி வழியே இலங்கைக்கு மின்சாரம் வழங்கக் கூடாது; இலங்கைக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் உள்ளிட்ட ஒன்பது கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்.

இக்கோரிக்கைகள் அனைத்தையும் விடுதலை சிறுத்தைகள் வரவேற்று ஆதரிக்கிறது. இத்தனை ஆதரிக்கும் வகையிலும் வலுப்படுத்தும் வகையிலும் 3-10-2013 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நானும் அவரோடு ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்கிறேன். என்னுடன் சுமார் 50 பேர் பங்கேற்கிறார்கள்.

அத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு நாளும் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். பிற தோழமை இயக்கங்களும் மாணவர்களும் இவ்வாறு தியாகு போராட்டம் வெற்றிபெற ஆதரவளிக்க வேண்டுகிறேன். இது சர்வதேச அளவில் ஈழத் தமிழர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்று தெரிவித்துள்ளார் தியாகு.

English summary
VCK leader Thirumavalavan has extended his support to Thiyagu's fast protest. He will sit with him on the fast today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X