For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி தண்ணீரை திறந்து விட பிரதமரை நேரில் வலியுறுத்த வேண்டும்- முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

காவிரி தண்ணீரை திறந்துவிட பிரதமரை நேரில் வலியுறுத்த வேண்டும் என முதல்வரை திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி பிரதமரை முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்

காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் இதுவரை நேரம் ஒதுக்காததால் புதிய வழக்கு தொடர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காவிரியில் இருந்து ஆண்தோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடகா 111 டிஎம்சி தண்ணீரை தான் திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Thirumavalavan urges CM to meet PM

இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் காவிரி நீரை திறந்து விட முடியாது என கர்நாடக தெரிவித்ததை தொடர்ந்து தமிழக அரசு அடுத்த நடவடிக்கை இறங்கியுள்ளது.

இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திருமாவளவன், காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி பிரதமரை முதல்வர் நேரில் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும், ஆணவ கொலைக்கு எதிராக புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Thirumavalavan urges CM to meet PM regarding the Cauvery water issue. And also he added to release the prisoners in Jayalalitha Birthday occassion
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X