For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குண்டர் சட்டம் முதல் ரத்து வரை... திருமுருகன் காந்தியின் 5 மாத சிறைப்பயணம்!

மெகுழுவர்த்தி ஏந்தியது முதல் குண்டர் சட்டம் ரத்து வரை திருமுருகன் காந்தியின் 5 மாத சிறைப்பயணத்தை பார்க்கலாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது முதல் குண்டர் சட்டம் ரத்தானது முதல் திருமுருகன் காந்தியின் சிறைப்பயணத்தை பார்க்கலாம்.

மே 21ம் தேதி தடையை மீறி மெரினாவில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்டோர் நினைவேந்தல் கூட்டம் நடத்தினர்.

Thirumuragan gandhi's five months jail term

மே 21 : தடையை மீறி கூட்டம் நடத்தக் கூடியவர்களை போலீசார் கைது செய்தனர்

மே 21 நள்ளிரவு : கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மே 30 : திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ஓராண்டு வெளியில் வர முடியாத குண்டர் சட்டம் பாய்ந்தது.

மே 31 : மத்திய அரசைக் கண்டித்து அரசை கண்டித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எதிராக திருமுருகன் காந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜூன் 1 : புதிதாக போடப்பட்ட வழக்கிற்காக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஜூன் 1 : புழல் சிறையில் திருமுருகன் காந்தியை சந்தித்து வைகோ தைரியம் கூறினார்.

ஜூன் 29 : குண்டர் சட்டத்தை எதிர்த்து, சென்னை மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் உள்ள அட்வைசரி போர்டு எனப்படும் அறிவுரைக் கழகத்தில் நான்கு பேரின் சார்பிலும் முறையீடு

செப்டம்பர் : குண்டர் சட்ட்ததை ரத்து செய்யக் கோரி திருமுருகன் காந்தி உள்ளிட் 4 பேர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

செப்டம்பர் 13 : வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ. செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வரும் 19 ஆம் தேதி அளிப்பதாக உத்தரவு

செப்டம்பர் 19 : திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு

English summary
From May 21 to September 19 Thirumurugan gandhi and 3 others Goondas act and jail term in Time line
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X