For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது.. சைதாப்பேட்டை கோர்ட் அதிரடி உத்தரவு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பக்கோடா சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுப்பு-வீடியோ

    சென்னை: மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்பக் கூடாது என்று சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று தமிழக போலீசிடம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

    ஐரோப்பாவில் இருந்து திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டார். பெங்களூர் போலீசார் அவரை நேற்று முழுக்க விசாரித்தனர்.

    பிரிவு

    பிரிவு

    அவரை தேச துரோக வழக்கில் கீழ் கைது செய்தனர். அரசுக்கு எதிராக பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது என்று வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். மூன்று பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

    ஏன் கைது

    ஏன் கைது

    ஐரோப்பாவில், திருமுருகன் காந்தி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசினார். மத்திய மாநில அரசுகள் சேர்ந்து நடத்திய துப்பாக்கி சூடு என்று 200க்கும் அதிகமான உலக நாட்டு பிரதிநிதிகள் முன் பேசினார். அந்த பேச்சு பலரை ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து பேச வைத்துள்ளது. இதனால் அவரை போலீஸ் கைது செய்துள்ளனர்.

    ஆஜர் படுத்தப்பட்டார்

    ஆஜர் படுத்தப்பட்டார்

    இன்று அவர் தமிழக போலீசால் பெங்களூரில் இருந்து கஸ்டடியில் எடுக்கப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார்.அவரிடம் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விசாரிக்க இருக்கிறார்கள்.கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, தமிழக போலீசால் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தேசவிரோத வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி தற்போது திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

    சரமாரி கேள்வி

    சரமாரி கேள்வி

    இந்த நிலையில் சைதாப்பேட்டை கோர்ட் நீதிபதி பிரகாஷ் இந்த வழக்கில் தமிழக போலீசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார் என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும் ஏன் அவசரம் அவசரமாக திருமுருகன் காந்தியைக் கைது செய்தீர்கள். பிரிவினை பேச்சு வீடியோவை ஏன் 64 நாட்களாகியும் தாக்கல் செய்யவில்லை, என்று சாரமாரியாக் நீதிபதி பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

    சிறைக்கு அனுப்ப கூடாது

    சிறைக்கு அனுப்ப கூடாது

    போலீஸ் அவரை சிறையில் அடைக்க அனுமதி கோரி இருந்தது. ஆனால் திருமுருகன் காந்தியை சிறைக்கு அனுப்ப முடியாது என்று நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார். அதேபோல் போலீஸ் காவலில் அனுப்பவும் நீதிபதி பிரகாஷ் மறுத்து விட்டார். தேவையானால் 24 மணி நேரத்துக்குள் அவரை விசாரிக்கலாம் என்று கூறி விட்டார்.

    English summary
    May 17 association coordinator Thirumurugan Gandhi arrested in Bengaluru airport. Police being produced him at the Saidapet court.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X