For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெல்லையில் கடும் பனி பொழிவு.. மக்கள் வீட்டில் முடக்கம்

நெல்லையில் கடும் பொழிவு நிலவி வருவதால் பொது மக்கள் வீட்டின் முடங்கும் நிலை காணப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் கடும் பொழிவு நிலவி வருவதால் பொது மக்கள் வீட்டின் முடங்கும் நிலை காணப்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் அணைகள் நிரம்பியதால் தற்போது ஓரளவுக்கு பாசன வசதிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது கடுமையான பனி பொழிவு ஏற்பட்டு வருகிறது.

Thirunelveli people suffer due to heavy snow

இந்த பனி காஷ்மீரில் இருப்பது போல் மரம், செடிகளில் படர்ந்து காணப்படுகிறது. காலை 8 மணிக்கு சூரியன் உதிக்க தொடங்கிய பிறகு 9 மணி முதல் வெயிலின் தாக்கம் தொடங்குகிறது. அதே நிலை மாலை 4 மணி வரை நீடிக்கிறது.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குளிர் ஆரம்பிக்கிறது. இது இரவு 8 மணி முதல் அதிகரிக்கிறது. இரவு 9 மணிக்கெல்லாம் குளிர் உறைய வைப்பதால் பொது மக்கள் 9 மணிக்குள் வீட்டிற்குள் புகுந்து விடுகின்றனர்.

தொடர்ச்சியாக பெய்யும் இந்த பனிபொழிவால் காய்கறி விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை விடைபெறும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு அதனால் இரண்டாம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு கடுமையாக பனி பொழிந்து வருகிறது. இந்த சீதோஷ்ண மாற்றம் காரணமாக பொது மக்கள் மருத்துமனைக்கு அலைந்து வருகின்றனர்.

English summary
Winter season reaches it's peak level in Thirunelveli. Due to this Thirunelveli people suffer due to heavy snow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X