For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் நாளை டிடிவி கட்சி அறிமுக கூட்டம்... வித்தியாசமான முறையில் ஆள் சேர்க்கும் நெல்லை சகாக்கள்!

டிடிவி தினகரன் மதுரையில் நாளை தனது கட்சி கொடியை அறிமுகம் செய்கிறார், இதற்காக திருநெல்வேலியில் ஆள்சேர்க்கும் படலம் அரங்கேறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டிடிவி தினகரன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்- வீடியோ

    திருநெல்வேலி : டிடிவி தினகரன் மதுரையில் நாளை கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைப்பதையொட்டி அதிகாலையிலேயே நெல்லையில் இருந்து தொண்டர்கள் புறப்பட அந்த மாவட்ட டிடிவி ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் மீட்கும் வரை தேர்தலில் போட்டியி தங்களுக்கென தனி அடையாளம் தேவை என்று டிடிவி தினகரன் புதிய அணியை தொடங்குகிறார். மதுரையில் நாளை மாலை கட்சிக்கொடியை தினகரன் அறிமுகம் செய்து வைக்கிறார்.

    Thirunelveli TTV supporters new plan to gather mass at Madurai meeting

    இந்நிலையில் மதுரை கூட்டத்தில் பங்கேற்க திருநெல்வேலி மாவட்ட தினகரன் ஆதரவாளர்கள் வித்தியாசமான அழைப்பை விடுத்துள்ளனர். அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் 15.3.2018 அன்று மதுரை மாவட்டம் மேலூரில் கழக அமைப்பின் பெயர் அறிவிப்பு, கட்சி கொடி அறிமுக விழா காலை 9 மணிக்கு துவங்க இருக்கிறது.

    எனவே சிரமம் பார்க்காமல் கழகத்தினர் காலை 3 மணிக்கு எஎழுந்து புறப்பட்டு 7 மணிக்குள் மேலூர் வந்து அடைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். காலை 5.30 மணி முதல் தங்களுக்கு காலை உணவு மதுரை திருமங்கலம் சுங்கச்சாவடி அருகில் உள்ள ஓட்டலில் தயார் நிலையில் இருக்கும்.

    காலை உணவு பார்சல், தண்ணீர் ரெடியாக இருக்கும் அதனை பெற்றுக் கொண்டு சற்றும் தாமதிக்காமல் 7 மணிக்குள் நிகழ்ச்சி நடைபெறும் மேலூர் மைதானம் வந்து அமைந்து அங்கே அருகில் அமர்ந்து உணவுகளை அருந்திக் கொள்ளலாம். நம் மாவட்ட வருகை முதன்மையாக இருக்க ஒத்துழைப்பு தாருங்கள் என்பதோடு உணவு தொடர்புக்கான எண்களையும் தெரிவித்துள்ளனர் டிடிவி ஆதரவாளர்கள்.

    English summary
    Thirunelveli TTV Dinakaran supporters made arrangements to gather mass at Madurai meeting to prove that they were the lead apart from all districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X