For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திருநங்கைகள்

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: திருவள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு திருநங்கையர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரியை சேர்ந்த வங்கி ஊழியர் லிங்கம் என்பவர் கடந்த 28 ஆம் தேதி இரவு மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருநங்கை ஒருவரை போலீசார் கைது செய்தனர்.இதனால் அரவாணிகள் திருவள்ளூர் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்.

பொன்னேரி வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் குடிசை வீட்டில் வசிக்கும் திருநங்கைகளால் அடிக்கடி சுற்றுப்புற பகுதிகளில் பிரச்சினை ஏற்படுவதாக கூறி சிலர் அவர்களை காலி செய்ய கோரி கூறியிருந்தனர்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருங்கைகளின் வீடுகள் திடீரென தீப்பற்றியது இதனால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் 50 க்கும் மேற்பட்டோர் திருவள்ளுர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர்.

அதில், ‘‘எங்களது குடிசை வீடுகளை சிலர் தீ வைத்து எரித்து விட்டனர். எங்களுக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது. உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று கூறி உள்ளனர்.திருநங்கைகளின் முற்றுகையால் போலீஸ் அலுவலகம் மிகப் பரபரப்பாக காணப்பட்டது.

English summary
A transgender arrested by police in a murder case. Some unknown persons put fire to their huts. So more than 50 transgender blockade the police station in Thiruvallur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X