For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகள் மட்டுமல்ல, மனைவி, மருமகள் கஷ்டப்பட்டாலும் கூட வேடிக்கை பார்க்கக் கூடாது!

Google Oneindia Tamil News

சென்னை: இப்போதெல்லாம் வர்த்தக விளம்பரங்கள், வெறும் கடமையாக வெளிவருவதில்லை. மாறாக நமது உணர்வுகளை "டச்" செய்யும் வகையிலான விளம்பரங்களே அதிகம் வருகின்றன.

முன்பு பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவன விளம்பரம் ஒன்று அனைவரது உணர்வுகளையும் தொட்டுச் சென்றது. அந்த வகையில் இப்போது தந்தை - மகள் இடையிலான அன்பை வைத்து ஒரு விளம்பரத்தை ஏரியல் வாஷிங் பவுடர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Ariel - #ShareTheLoad

This father’s heart-warming apology to his daughter will make you wonder, ‘Are we passing on gender roles that haven't evolved with the times?’ Maybe its time to #ShareTheLoad.

Posted by Ariel India on Friday, February 19, 2016

மகள் வீட்டுக்குப் போகிறார் தந்தை. அங்கு மகள், பேரன், மருமகனைப் பார்த்து பூரிக்கிறார். மாலையில் பேரனுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். மகள் வேலை முடிந்து திரும்புகிறார்.

அலுப்புடன் வரும் மகள், வந்த அலுப்பை மறைத்துக் கொண்டு தனது வழக்கமான அலுவல்களில் மூழ்கிறார். போன் அடிக்கிறது, எடுத்து காதில் வைத்துக் கொண்டே பம்பரம் போல சுழல்கிறார். கணவருக்கு காபி கொடுக்கிறார். வாங்க வந்த காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கிறார். சமையலுக்கு அடுப்பில் பாத்திரத்தை வைக்கிறார்.

கூடவே லேப்டாப்பையும் லாகின் செய்து வந்த மெயில்களைப் பார்க்கிறார். மகன் சட்டையைக் கழற்றச் சொல்லி தாயிடம் வருகிறான். அதையும் செய்கிறார். கூடவே கீழே மகன் விளையாடி விட்டுப் போட்ட சாமான்களை எடுத்து அடுக்குகிறார்.. துவைக்க வேண்டியதை எடுத்து வாஷிங் மெஷினில் போடுகிறார்.. இன்னும் காதிலிருந்து போன் இறங்கவில்லை.... டிவியைப் பார்த்துக் கொண்டே லேப்டாப்பில் மூழ்கியுள்ளார் கணவர் (ஒர்க்கிங் பிரம் ஹோம் போல).

இவை அத்தனையையும் தந்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார். மனதுக்குள் என்னென்னவோ ஓடுகிறது.. மகள் வீட்டு விஜயத்தை முடித்துக் கொண்டு தன் வீடு திரும்பி வருகிறார். சூட்கேஸில் உள்ள தனது உடைகளை எடுத்து வாஷிங் மெஷினுக்குள் போடுகிறார். அதை வாங்க வந்த மனைவியிடம் நானே போடுகிறேன் என்று சொல்லிச் செல்கிறார். மனைவிக்கு இது புதிது.

அங்கே.. மகள் தனது தந்தை தனக்காக விட்டுச் சென்ற கடிதத்தைப் படிக்கிறார்.. மன்னித்து விடு மகளே என்று தந்தை எழுதியிருப்பதைப் பார்த்து நெகிழ்ச்சி கொள்கிறார்.

மகள் மட்டுமல்ல.. மருமகள், மனைவி என நம் வீட்டுப் பெண்கள் தினந்தோறும் படும் அல்லல்களை வேடிக்கை மட்டுமே பார்க்காமல் இவர் போல நாமும் வேலைகளைப் பகிர்ந்து கொண்டால் நிச்சயம் அந்த வீடுதான் சொர்க்கம்!

இந்த விளம்பரம் பிப்ரவரி 19ம் தேதி யூடியூபில் வெளியானது. தற்போது பேஸ்புக்கில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது.

உண்மையிலேயே அழகான செய்தியுடன் கூடிய அருமையான விளம்பரம் இது.

English summary
A new advertisement from the Ariel India is winning the hearts on social media. Since being posted on February 19, the ad has received over 2.6 million views on Facebook.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X