For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜிஎஸ்டி குறைந்த பிறகும் விலையை குறைக்காத ரெஸ்டாரண்டுகள்..மோசடி நடப்பது இப்படித்தான்.. மக்களே உஷார்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜிஎஸ்டி 28% வரிவிதிப்பில் இருந்து 173 பொருட்களுக்கு விலக்கு- அதிரடி முடிவு- வீடியோ

    சென்னை: ரெஸ்டாரண்டுகளில் ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஹோட்டல்களோ விலையை குறைக்காமல் வழக்கமான விலையில் வாடிக்கையாளர்கள் தலையில் விலையேற்றத்தை கட்டி லாபம் சம்பாதிக்கின்றன.

    கவுகாத்தியில் சமீபத்தில் நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி மாற்றர முடிவுகளின்படி, ரெஸ்டாரம்டுகளின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி, இதுவரை 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் பில் 118 ரூபாயாக இருந்த நிலையில், அது நவம்பர் 15ம் தேதி, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி அறிமுகமான நாளில் இருந்து, ரூ.105 என குறைக்கப்பட வேண்டும்.

    குறைக்கப்பட்ட பில் தொகை

    குறைக்கப்பட்ட பில் தொகை

    மாற்றப்பட்ட ஜிஎஸ்டி வரிப்படி சில ஹோட்டல்கள் நேற்று முதல் பில் தொகையை குறைக்க ஆரம்பித்துவிட்டன. பல நெட்டிசன்கள் தாங்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லை, சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

    பில்லில் எப்படி காட்டுகிறார்கள்?

    பில்லில் எப்படி காட்டுகிறார்கள்?

    அதேநேரம், சில மோசடி ரெஸ்டாரண்டுகள் இதை செய்வதில்லை. ஜிஎஸ்டி 18 சதவீதமாக இருந்தபோது இருந்த விலையிலேயே உணவு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதெப்படி முடியும்? பில்லில் ஜிஎஸ்டி 5 சதவீதம் என்று காட்டுமே, கூடுதலாக எப்படி அவர்களால் விலை நிர்ணயம் செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறதா?

    பெரிய மோசடி

    அதில்தான் பச்சையாக மோசடி செய்கின்றன சில ரெஸ்டாரண்டுகள். ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு பில்லில் காட்டியபோதிலும், உணவு பொருளின் விலையை ஏற்றிவிட்டனர். எனவே 14ம் தேதி என்ன விலைக்கு உணவு விற்றதோ அதே விலைக்கு 15ம் தேதிக்கு பிறகும் உணவு விற்கப்படுகிறது. குறைக்கப்பட்ட வரியால் கிடைக்கும் லாபம் மட்டும் ரெஸ்டாரண்டு உரிமையாளர்களுக்காம். இந்த நெட்டிசனின் டிவிட்டில் இணைக்கப்பட்டுள்ள பில்லை பாருங்கள். உங்களுக்கே அது புரியும்.

    மக்களே புறக்கணிக்க வேண்டும்

    மக்களே புறக்கணிக்க வேண்டும்

    தமிழகத்திலுள்ள புகழ்பெற்ற 'செயின் ரெஸ்டாரண்டுகள்' சிலவும் கூட இதேபோன்று வரி லாபத்தை தாங்கள் ஈட்டிக்கொண்டு, மக்கள் தலையில், விலையேற்றத்தை கட்டி மகிழ்கின்றன. 14ம் தேதி ஒரு காபி 35 ரூபாய் என்றால் இன்றும் அதே விலையில்தான் அந்த ரெஸ்டாரண்டில் காபி விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது, மக்கள் இதுபோன்ற ரெஸ்டாரண்டுகளை புறக்கணித்துவிட்டு வாடிக்கையாளர்களுக்கு ஜிஎஸ்டி பலனை வழங்கும் ரெஸ்டாரண்டுகளுக்கு செல்ல வேண்டும்.

    English summary
    This is how customers are cheated, businesses make money and government is blamed, says Netizens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X