For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மவுலிவாக்கம் 11 மாடியை விடுங்க.. இந்த 31 மாடிக் கட்டடம் எப்படி தரைமட்டமாகிறது பாருங்கள்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2009ம் ஆண்டு 31 மாடிக் கட்டடம் ஒன்று ஒரே நிமிடத்தில் குண்டு வைத்துத் தரைமட்டமாக்கப்பட்டு உலக சாதனை படைத்தது.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டடம் நாளை இடிக்கப்படவுள்ளது. நவீனத் தொழில்நுட்பம் மூலமாக இந்தக் கட்டடம் இடிக்கப்படவுள்ளது என்பதால் மவுலிவாக்கம் கட்டடம் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டடங்களை இடிப்பது என்பது இப்போதெல்லாம் முன்பு போல கஷ்டமான வேலை இல்லை. குட்டி சைஸ் "குண்டுகளை" வைத்து ஜஸ்ட் லைக் தட் இடித்துத் தரை மட்டமாக்கி விடுகிறார்கள். இருந்த இடமும் தெரியாமல் தகர்த்த தடமும் தெரியாமல் ஒரு தூசு தும்பு கூட இல்லாமல் கப்சிப்பென கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படுவது வெளிநாடுகளில் சகஜமாகி விட்டது.

This is the world'ss tallest building which was imploded

அதேபாணியில்தான் நாளை சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடிக் கட்டடத்தை இடிக்கப் போகிறார்கள். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன.

மவுலிவாக்கம் இருக்கட்டும்.. உலகிலேயே மிகப் பெரிய கட்டட இடிப்பு எது தெரியுமா.. இந்த வீடியோவில் உள்ள கட்டடம்தான் அது. இது டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பத்ரே தீவில் இருந்த 31 மாடிக் கட்டடம். 378 அடி உயரமானது. இந்தக் கட்டடம் 2009ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி காலை 9.01 மணிக்கு தகர்க்கப்பட்டது.

அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மேல் தளத்திலிருந்து இது இடிக்கப்படுவதை படமாக்கினர். உலகிலேயே தரைமட்டமாக்கப்பட்ட மிக உயரமான, கான்க்ரீட் கட்டடம் இதுதான் என்ற உலக சாதனையையும் இது படைத்தது. மேலும் ஒரே நிமிடத்தில் இந்தக் கட்டடம் தரைமட்டமானது குறிப்பிடத்தக்கது.

நாளை மவுலிவாக்கம் கட்டடமும் இதேபோலத்தான் இடிபடப் போகிறது... வாங்க அமெரிக்கக் கட்டடம் எப்படி இடிந்தது என்பதைப் பார்ப்போம்.

English summary
In Texas a 31 storey hotel was imploded in September 13th, 2009. This was the world'ss tallest building which was imploded by explosives with modern technology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X