For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அரசு குறைத்த கட்டண விவரம் எவ்ளோ தெரியுமா?

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பேருந்து கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு

    சென்னை : தமிழக அரசு உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.

    கடந்த 19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதையடுத்து தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்து வெளியிட்டுள்ளது. அதில் சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவிலிருந்து 58 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், விரைவு பேருந்துகளில் கி.மீ.க்கு 80 பைசாவிலிருந்து 75 பைசாவாகவும், சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 90 பைசாவிலிருந்து 85 பைசாவாகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் கி.மீ.க்கு 110 பைசாவலிருந்து 100 பைசாவாகவும், குளிர்சாதன பேருந்துகளில் கி.மீ.க்கு 140 பைசாவிலிரு்து 130 பைசாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    This much only TN government reduces bus fare amount

    சாதாரண பேருந்துகளில் 10 கி.மீ. வரை ரூ. 60 வதிலிருந்து ரூ.58 ஆகவும், விரைவு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 80 ரூபாவிலிருந்து 75 ரூபாயாகவும், சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை ரூ.90-லிருந்து ரூ.85-ஆகவும், அதி நவீன சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 110 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், குளிர்சாதன பேருந்துகளில் 30 கி.மீ.வரை 140 ரூபாயிலிருந்து 130 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 5-ஆக இருந்த நிலையில் ரூ.4-ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம் ரூ.23-லிருந்து ரூ.22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மாவட்டங்களில் நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து ரூ4- ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.19-லிருந்து ரூ18 -ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

    English summary
    TN Government reduces bus fare which it was hiked on January 19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X