For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்படி ஒரு அழகான நகராட்சிப் பள்ளியை பார்த்துள்ளீர்களா..?

Google Oneindia Tamil News

காரைக்குடி: காரைக்குடியில் உள்ள நகராட்சி ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி உள்ளூரில் ரொம்பப் பிரபலம். தனியார் பள்ளிகளுக்கு இணையான பாட போதனை, வசதிகள், சுத்தம் என அட்டகாசமாக கலக்கி வருகிறது இந்த நகராட்சிப் பள்ளி, அமைதியாக.

தமிழகத்தில் உள்ள பல அரசுப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சிப் பள்ளிகள் முன்பு போல இல்லை. அழகாக மாறியுள்ளன. நல்ல பாட போதனை நடக்கிறது. மாணாக்கர்கள் ரேங்குகளைப் பெற்று அசத்துகின்றனர். 100 சதவீதத் தேர்வை பல பள்ளிகள் கண்டு வருகின்றன.

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவ மாணவியரும் படிப்பதில் சாதனை புரிகின்றனர். கடுமையான போட்டியைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த வகையில் காரைக்குடியில் உள்ள ஒரு நகராட்சிப் பள்ளி வெப்சைட்டெல்லாம் வைத்து அசத்தி வருகிறது.

ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி

ராமநாதன் செட்டியார் உயர்நிலைப் பள்ளி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகரின் மையப்பகுதியில் இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி பிரமிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. அரசு பள்ளியான இப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்படுகிறது

டிஜிட்டல் கிளாஸ் ரூம்

டிஜிட்டல் கிளாஸ் ரூம்

டிஜிட்டல் வசதிகளுடன் கூடிய வகுப்பறைகள், சுத்தமான வகுப்பறைகள், போதுமான ஆசிரியைகள், அறிவியல் விழாக்கள், கம்ப்யூட்டர் ஆய்வகங்கள், நூலகம் உள்பட அனைத்து வசதிகளுடன் சிறப்பாக செயல்படுகிறது இந்த நகராட்சிப் பள்ளி.

10ம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி

10ம் வகுப்பில் நூறு சதவீத தேர்ச்சி

கடந்த பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் இந்தப் பள்ளிக்கூடம் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளது. 483 மதிப்பெண்கள் எடுத்த இலக்கியா முதலிடத்தைப் பெற்றார்.

தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா

தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா

தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் ஆசிரியப் படை இந்த மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் அடக்கமாக இருக்கிறது.

வெப்சைட்

வெப்சைட்

1939ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளிக்கூடம் 2002ம் ஆண்டு நடுநிலைப் பள்ளியாகவும், 2013ல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியின் இணையதளத்தை (http://www.rmhschool.com/#) நகராட்சித் தலைவி கற்பகம் இளங்கோ 16ம் தேதி தொடங்கி வைத்தார்.

முதல் அரசுப் பள்ளி

முதல் அரசுப் பள்ளி

சொந்தமாக இணையதளம் வைத்துள்ள முதல் அரசுப் பள்ளி இதுதான் என்று கூறப்படுகிறது. அந்தப் பெருமைக்கு உரித்தானவர்களாக இந்தப் பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள் அமைந்துள்ளனர்.

பேஸ்புக்கிலும்

பேஸ்புக்கிலும்

அது மட்டுமா, பேஸ்புக்கிலும் இந்தப் பள்ளி இடம் பெற்றுள்ளது. அதிலும் லேட்டஸ்ட் செய்திகளை, பள்ளி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் போஸ்ட் செய்து வருகிறது இந்த பள்ளி நிர்வாகம்.

மாணவ மாணவியருக்கு பேஸ்புக்கில் பிறந்த நாள் வாழ்த்து

மாணவ மாணவியருக்கு பேஸ்புக்கில் பிறந்த நாள் வாழ்த்து

அது மட்டுமல்லாமல், மாணவ, மாணவியரின் பிறந்த நாளுக்கு பேஸ்புக்கிலேயே அவர்களது புகைப்படத்துடன் வாழ்த்தும் கூறி அசத்துகிறது இந்த பள்ளி.

நல்லதொரு நகராட்சிப் பள்ளி

நல்லதொரு நகராட்சிப் பள்ளி

நல்ல கல்வி போதனை, சுத்தமான சுற்றுச்சூழல், நவீன தொழில்நுட்பத்திலும் பங்கு என சகல விதத்திலும் சிறந்த பள்ளியாக இந்த நகராட்சிப் பள்ளி விளங்கி வருகிறது.

English summary
Karaikudi R S Ramanathan chettiar municipal high school has launced its own website. It has become the first of its kind to have a website.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X