For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்ம ஊரு சென்னைக்கு பெரிய "ஹாரன்" அடிங்க...!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் வாகன நெரிசலுடன் சென்னையை ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக வாகனங்கள் சென்னையில் சரமாரியாக உலா வருகிறதாம்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். இப்போது அதையே மாற்றிப் போட்டு வண்டியில்லாத மனிதன் குப்பையிலே என்பது போல வாகனம் இல்லாமல் யாருமே நகரங்களில் குப்பை கொட்ட முடியாத நிலை. ஏதாவது ஒரு வாகனம் இருந்தால்தான் நம்மால் நாட்களை நகர்த்த முடியும் என்ற அளவுக்கு நமது வாழ்க்கை முறை மாறிப் போயுள்ளது.

அதிலும் இருசக்கர வாகனங்களை விட நான்கு சக்கர வாகனங்களின் பெருக்கம் கிடுகிடுவென அதிகரித்து விட்டது. இந்தியாவின் பொருளாதார நிலை மேம்பட்டிருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், லோன் தருவது அதிகரித்திருப்பதும் இதற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

வாகன நெரிசல்

வாகன நெரிசல்

இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் மனிதர்களுக்கு இணையாக சகல விதமான வாகனங்களின் பெருக்கம் அதிகம் இருப்பதைக் காணலாம். வாகன நெரிசலானது நகரத்துக்கு நகரம் வேறுபாடுகிறது, மாறுபடுகிறது.

டெல்லி நிலவரம்

டெல்லி நிலவரம்

டெல்லி ஒரு மாநிலமாக தற்போது உள்ளது. தலைநகராகவும் விளங்குகிறது. இந்த நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் பிற நகரங்களுடன் ஒப்பிட்டால் இங்கு வாகன நெரிசல் குறைவுதான்.

டெல்லியை தூக்கி சாப்பிட்ட பெருநகரம்

டெல்லியை தூக்கி சாப்பிட்ட பெருநகரம்

டெல்லியை விட அதிக அளவிலான வாகன நெரிசல் உள்ள நகரம் இந்தியாவில் உள்ளது. அது மும்பையோ, கொல்கத்தாவோ, ஹைதராபாத்தோ, பெங்களூரோ அல்ல.. நம்ம சிங்காரச் சென்னைதான் அது.

அடேங்கப்பா

அடேங்கப்பா

சென்னையின் வாகன அடர்த்தியானது ஒரு கிலோமீட்டர் சாலைக்கு 2093 வாகனங்கள் என்ற அளவில் உள்ளது. இதுவே டெல்லியில் 245 வாகனங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோடு பெரிசு.. நமக்கு ரொம்ப சிறிசு

ரோடு பெரிசு.. நமக்கு ரொம்ப சிறிசு

இதற்கு முக்கியக் காரணம், டெல்லியில் சாலையின் நீளம் மிகப் பெரியதாகும். அதாவது அங்கு சாலைகளின் நீளம், 30,000 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. சென்னையிலோ வெறும் 1800 கிலோமீட்டர்தான்.

ஆனால் மாசு கம்மி பாஸ்

ஆனால் மாசு கம்மி பாஸ்

ஆனால் டெல்லியுடன் ஒப்பிடுகையில் சென்னையில் வாகனத்தால் ஏற்படும் மாசு குறைவாக இருக்கிறதாம். இது சற்று ஆறுதலான செய்திதான். அதாவது டெல்லியை விட 10 மடங்கு மாசு குறைவாகும்.

2வது இடத்தில் புனே

2வது இடத்தில் புனே

புனே நகரில் வாகன அடர்த்தியானது கிலோமீட்டருக்கு 1014 வாகனங்கள் என்ற அளவில் உள்ளது. 723 வாகனங்களுடன் ஹைதராபாத் 3வது இடத்திலும், கொல்கத்தா 4வது இடத்திதலும் உள்ளன.

சரி வண்டி எத்தனை

சரி வண்டி எத்தனை

டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னையில்தான் நாட்டிலேயே அதிக அளவிலான வாகனங்கள் உள்ளனவாம். டெல்லியில் அதிகபட்சமாக 73 லட்சம் வாகனங்கள் உள்ளன. சென்னையில் 37 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஹைதராபாத்தில் 33.8 லட்சம், புனேயில் 22.6 லட்சம், மும்பையில் 20 லட்சம் வாகனங்கள் உள்ளன.

English summary
It’s really hard to say in what aspect India is simple. The diversity and complexity in almost every sector of the nation know no bounds. This pool of statistics is sure to amaze most of the readers, who would stand corrected after knowing this through.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X