For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாம்பாரில் பருப்பைக் கலக்கலாம்.. சாதியைக் கலக்கலாமோ..? ஒரு "கமகம" விவாதம்!

Google Oneindia Tamil News

சென்னை: சாம்பாரில் பிரச்சினை வரும் என்று என்றாவது நினைச்சுப் பாத்திருப்பீங்களா.. வந்திருச்சுங்கானும் அதுக்கும்... இதோ ஒரு சாம்பார் விளம்பரம் தொடர்பான சர்ச்சை பேஸ்புக்கில் கலகலக்க வைத்துள்ளது பாருங்கள்.

இது "பவுடர்" காலம்.. அதாவது ரசப் பொடி, பருப்புப் பொடி, சாம்பார் பவுடர் என எல்லாமே பவுடரும், பொடியுமாக மாறிப் போயுள்ள காலம். முன்பு போல கஷ்டப்பட்டு எதையும் செய்யத் தேவையில்லை. டப்பாவைத் திறந்தோமா.. சாப்பிட்டோமோ என்று மக்கள் படு ஜூட்டாக மாறி பல காலமாகி விட்டது.

இந்த நிலையில் ஈஸ்டர்ன் நிறுவனத்தின் சாம்பார் பவுடர் சர்ச்சையாகியுள்ளது. பிராமின் சாம்பார் பவுடர் என்பது அந்த நிறுவனத்தின் சாம்பார் பவுடருக்கான பெயர். அதுதான் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சாம்பாரில் சாதியா?

சாம்பாரில் சாதியா?

இதுகுறித்து யுவகிருஷ்ணா என்பவர் போட்டுள்ள பேஸ்புக் பதில் சாம்பாரில் சாதியைக் கலப்பது குறித்து படத்துடன் போட்டுள்ளார். இதையடுத்து வாதப் பிரதிவாதங்கள் களை கட்டியுள்ளன.

அப்ப இது என்ன பாஸ்?

அப்ப இது என்ன பாஸ்?

உடனே அதற்குப் பதிலளித்துள்ள சபரி நாதன் என்பவர், பெரியார் ரைஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ள ஒரு ஐட்டம் குறித்தும், பிராமின் சேமியா பாயாசம் மிக்ஸ் குறித்தும் படம் போட்டு பதிலளித்துள்ளார்.

ஹலால் செய்யப்பட்டதுன்னா என்ன?

ஹலால் செய்யப்பட்டதுன்னா என்ன?

சுப்ரமணியன் சதீஷ் குமார் என்பவர் கொடுத்துள்ள பதில் அப்படியானால் ஹலால் செய்யப்பட்ட உணவு, ஜெயின் புட் இதெல்லாம் நீங்க கேள்விப்பட்டதில்லையா என்று கேட்டுள்ளார்.

அவரே முஸ்லீம்தானே

அவரே முஸ்லீம்தானே

ஜெயமகேசன் சந்திரகாந்தன் என்பவர் அளித்துள்ள பதிலில், இந்த ஈஸ்டர்ன் கம்பெனி முதலாளி முஸ்லீம். பெயர் மீரான். கேரள முஸ்லீம். இவருக்கும் பார்ப்பனருக்கும் என்ன சம்பந்தம்.. ஏன் இந்த பெயரை வைத்தார்கள் என்பதை திராவிட மூளையைக் கழற்றி வைத்து விட்டு பார்த்தால் பதில் கிடைக்கும். இதுக்கும் பார்ப்பான் காரணமா என்று கேட்டுள்ளார்.

எங்க வீட்டுல மூனு சாதி உணவு!

எங்க வீட்டுல மூனு சாதி உணவு!

ஹன்சா ஹன்சா என்பவர் கொடுத்துள்ள பதில் சுவாரஸ்யமானது.. என் வீட்டில் 3 வகை சம்பார் பொடி உண்டு. செட்டியார் (மல்லி தூக்கலாக, மசாலா, கருவடாம் சேர்த்தது). கேரளா (தேங்காயம் அதிகம். அன்றன்று செய்ய. ஐயர் (மசாலா வாசனை இருக்காது) இன்னும் உண்டு. என் வீட்டில் போணியாவதில்லை. அதற்கு யுவகிருஷ்ணாவின் பதில் இது.. செட்டிநாடு உணவுன்னு கேள்விபட்டிருக்கேன். தனியா செட்டியார் சாம்பாருன்னு இருக்கா என்ன...? அதற்கு ஹன்சாவின் பதில் - அந்த கருவாடம் அவங்க ஸ்பெஷல்.. ஈக்வலன்ட் கிடையாது.

வாயிலேயே வெட்டுவேன்

வாயிலேயே வெட்டுவேன்

நல்லாபடியாக போய்க் கொண்டிருந்த விவாதத்தில் ஒரு வன்முறைப் பதிவும் இடையே குறுக்கிடுகிறது.. திருநாவுக்கரசு கலைவாணி என்பவர் வந்தேன் வாயிலேயே வெட்டுவேன் என்று போட்டு கிலி ஏற்படுத்தியுள்ளார்.

அப்ப முதலியார் மெஸ், நாயுடு ஹால், பாய் பிரியாணி?

அப்ப முதலியார் மெஸ், நாயுடு ஹால், பாய் பிரியாணி?

இது ராஜு அபினவ் என்பவரின் பதிவு...சாம்பாரில் சாதியை பிரிப்பது பார்ப்பானர் அல்ல பார்ப்பவனின் கண்ணில் தான் சாதி உள்ளது(இத தயாரித்தவனிடம் கேட்க வேண்டிய கேள்வியை ஓட்டு மொத்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மேல் பழி சுமத்துவது தான் உங்கள் நோக்காமா? அப்படி என்றால் முதலியார் மெஸ்,தேவர் ஹோட்டல்,நாயுடு ஹால்,பாய் பிரியாணி,நெல்லை மேரி ஸ்டார்ஸ் இது எல்லாம் ஜாதி இல்லாமல் அவர்களின் செல்ல பெயரா!நீங்களே சிந்தியுங்கள்!பதிவிடுமுன் அடுத்தவர் மனதை புண்படுத்தாமல்(லைக் வரும் நினைத்துகொண்டு)பதிவிடுங்கள் ஏன்னென்றால் இதன் பெயரே சமுக வலை தளம்!நண்பரே!நன்றி!(உங்களை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எள்முனையளவும் எனக்கில்லை)நன்றி!

இது தனி ஆவர்த்தனம்

இது சஞ்சீவனி பூதி என்பவர் போட்டுள்ள டிவிட். கேரளாவைச் சேர்ந்த பிராமின்ஸ் டச் என்ற மாங்காய் ஊறுகாய் குறித்த பதிவு இது.

அட ஆண்டவா!

English summary
An arguement on a Sambar powder brand is heating up in FB.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X