For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எப்போது புக் செய்தால் கன்பார்ம் ரயில் டிக்கெட் கிடைக்கும்? இந்த ஆப் முன்கூட்டியே சொல்லுதுங்க

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ரயில் டிக்கெட் பற்றி இந்த ஆப் முன்கூட்டியே சொல்லுதுங்க...வீடியோ

    சென்னை: விடுமுறை நாளிலோ, அல்லது அவசர பணியாக எங்காவது ஊருக்கு கிளம்பும் போதோ ரயில் டிக்கெட் கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    ஆனால் இப்பொழுது ஒரு செல் ஃபோன் ஆப், எப்பொழுது பயணிகள் கன்ஃபார்ம் டிக்கெட்டுகளை பெறமுடியும் என்பதை கணித்து தெரிவிக்கிறது.

    120 நாட்களுக்கு முன்பாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி உள்ள போதிலும், பெரும்பான்மையாக நான்கு மாதங்களுக்கு முன்பு யாரும் டிக்கெட்டுகளை புக் செய்வது இல்லை. ஆனால் RailYatri செல்போன் ஆப், எத்தனை நாட்களுக்குள்ளாக அல்லது எத்தனை மணி நேரங்களுக்கு உள்ளாக ரயில் டிக்கெட் காலியாகும் என்பதை கணித்து தெரிவிக்கிறது.

    ரயில்களில் மாறும்

    ரயில்களில் மாறும்

    முந்தைய டேட்டாக்கள் மற்றும் டீப் டேட்டா ஆகியவற்றை ஆய்வு செய்து இந்த ஆப் இந்த விவரங்களை பயணிகளுக்கு தருகிறது. அந்த ரயிலில் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளை முன்பதிவு வேகத்தையும் இது கணக்கில் எடுத்து இவ்வாறு தகவல் அளிக்கிறது. சில ரயில்களில் சில மாதங்கள் கழித்தும் கூட டிக்கெட் கிடைக்கும். சில ரயில்களில் முன்பதிவு ஆரம்பித்த ஐந்து, ஆறு மணி நேரங்களுக்குள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விடும்.

    அடேங்கப்பா வேகம்

    அடேங்கப்பா வேகம்

    இந்தியாவில் சுமார் 50% ரயில்களில் முன்பதிவு ஆரம்பித்த இரண்டு வாரங்களுக்குள்ளாக, அனைத்து டிக்கெட்டுகளும் விற்று விடுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 51 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன என்பது சராசரி.

    கணிக்கும் ஆப்

    கணிக்கும் ஆப்

    RailYatri ஆப் அந்தந்த ரயில்களில் டிக்கெட் விற்பனை ஆகும் வேகத்தை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. பயணிகளுக்கு அந்த குறிப்பிட்ட ரயிலில் டிக்கெட் எந்த வேகத்தில் விற்பனையாகிறது என்று தெரிந்துவிடுவதால் முன்னெச்சரிக்கையாக செயல்பட வசதியாக இருக்கும். மிகவும் வேகமாக விற்பனையாகும் என்று தெரிந்துவிட்டால் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வசதியாக இருக்கும்,

    தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்

    தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்

    ரயில் யாத்ரி தகவல்படி, 12 மணி நேரத்திற்குள்ளாக முன்பதிவு முடிந்துவிடும் ரயில்களில் ம.பி. மாநிலத்தின் இந்தூர் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நடுவேயான சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்ளது. 15 நாட்களுக்குள் முன்பதிவு நிறைவடைந்துவிடும் ரயில் பட்டியலில், தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளது.

    English summary
    RailYatri app tells you how many hours/days you have to book your tickets before they get sold out.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X