For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உடம்புக்கு முடியாத நிலையிலும்.. வீட்டிலிருந்தபடியே கவி பாடி தனது ஆதரவைப் பதிவு செய்த பெண்!

Google Oneindia Tamil News

சென்னை: தஞ்சாவூரைச் சேர்ந்த 55 வயது ஆடிட்டர் சாந்தி செல்வபதி என்பவர் தனது உடல் நிலை காரணமாக ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டக் களத்தில் போக முடியாத நிலை ஏற்பட்டதால் வருத்தமடைந்தாலும், தனது வீட்டிலிருந்தபடியே தன்னால் முடிந்த ஒரு ஜல்லிக்கட்டுக் கவிதையை எழுதி தனது மகள் மூலம் நமக்கு அனுப்பி வைத்து தனது உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

உடல் நிலை ஒத்துழைக்காத காரணத்தால் நேரில் போய் தன்னால் ஆதரவுக் குரல் கொடுக்க முடியவில்லை என்றும் இதனால் கவிதை மூலமாக தனது உணர்வைப் பதிவு செய்வதாகவும், குவைத்தில் உள்ள தனது ஒரு வயது பேரன் கூட தனது உணர்வை வெளிப்படுத்தி புகைப்படம் அனுப்பியிருப்பதாகவும் கூறி நெகிழ வைக்கிறார்.

This woman expresses her feelings in letter

சாந்தி செல்வகணபதி வீர பாண்டிய கட்டபொம்மன் வசனத்தைத் தழுவி எழுதியதாக அவரது மகள் திவ்யா நமக்கு அனுப்பியுள்ள கடிதம்:

நீ யாருடா ஜல்லிக்கட்டு தடை போட
நீ எங்கள் மாமனா மச்சானா மானங்கெட்டவனே

நீ ஒருநாளாவது மாட்டை குளிப்பாட்டினாயா
ஒரு கைப்பிடி புல் கொடுத்தால் சந்தோசமா
மூஞ்சை பாக்குமே அதை அனுபவித்துள்ளாயா
நான் அனுபவித்துள்ளேன் மானங்கெட்டவனே

நீ சிக்கன் சாப்பிடுவதை விட்டாயா ?
நீ மட்டன் சாப்பிடுவதை விட்டாயா ?
நீ மாட்டிறைச்சி சாப்பிடுவதை விட்டாயா ?
நீ பன்றிறைச்சி சாப்பிடுவதை விட்டாயா ?

நீ யார் எங்கள் வீர ஜல்லிக்கட்டை தடை செய்ய ?

இது மெரினா கடற்கரையா ! தமிழன் தலையா !!
இது என்ன போராட்டமா ! புரட்சியா !!
இது என்ன ஜல்லிக்கட்டா ! மஞ்சு விரட்டா!!
இந்த உலகமே கேட்கிறது அறப்போராட்டமா ! உப்பு சத்யாகிரகமா!!

குவைத்திலிருந்து,
எங்கள் லக்ஷன் கேக்கிறான் i want A2 milk, we need jallikattu

தமிழன் வாழ்வான்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாடே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
தமிழா தமிழா விடியும் வருந்தாதே

English summary
Shanthi Selvapathy, an auditor from Tanjore aged 55 is sick physically. But she has expressed her feelings on Jallikattu on letters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X