For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காமன்வெல்த்துக்கு எதிர்ப்பு- 7வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்த தியாகு மருத்துவமனையில் அனுமதி!

By Mathi
Google Oneindia Tamil News

Thiyagu
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகு 7வது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்கக் கூடாது, இலங்கையை காமன்வெல்த் மாநாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெற்றி அல்லது வீரச்சாவு என்ற முழக்கத்துடன் தியாகு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஈழத் தமிழர் ஆதரவு இயக்க தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். தியாகு தமது உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இன்று தியாகுவின் உண்ணாவிரதம் 7வது நாளாக நீடித்தது. ஆனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் தாம் மருத்துவமனையிலும் தொடர்ந்து உண்ணாவிரதத்தை மேற்கொள்ளப் போவதாக தியாகு அறிவித்துள்ளார்.

English summary
Thozhar Thiyagu who was on hunger strike for the past 7 days demanding PM should not participate Commonwealth summin in Colombo, now hospitalised.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X