For Daily Alerts
துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சீர்காழியில் சாலைமறியல்.. நாம் தமிழர் கட்சியினர் கைது
சீர்காழி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சீர்காழியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் இன்று 100 வது நாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை தடுக்க முயன்ற போலீசார் அப்பாவி பொதுமக்களை குருவி சுடுவது போல் சுட்டுக்கொன்றது.

இதில் 9 பேர் பலியானார்கள். இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் போராட்டத்தால் சீர்காழி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.