For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பைக் ஓட்டுன பிச்சிப்புடுவேன்.. பள்ளிகளுக்கே போய் மாணவர்களை எச்சரித்த கோவில்பட்டி போலீசார்

தூத்துக்குடி மாவட்டத்தில் லைசென்ஸ் இல்லாமல் பைக் ஓட்டும் இளம் மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: லைசென்ஸ் இல்லாமல் மாணவ மாணவிகள் பைக்குகளை ஓட்டி வருவதால் விபத்துக்கள் அதிகரிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஏராளமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனத்தில் வருவதாக கூறப்படுகிறது.

 Thoothukudi Police warns the School students who rides the bikes without the legal age and license

பள்ளியில் பயிலும் மாணவர்கள் பைக் ஓட்டுவதற்கான லைசென்ஸ் இல்லாமலும், அதற்கு வயது இல்லாமலும் பைக் ஓட்ட கூடாது என விதிமுறைகள் உள்ளன. ஆனால் இதை மீறும் மாணவர்கள் பைக்கில் வருவதோடு கூட பயிலும் சக மாணவர்களையும் பைக்கில் ஏற்றி செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தூத்துக்குடி எஸ்பிக்கு வந்த புகார்களை தொடர்ந்து, போலீசார் சார்பாக கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் பள்ளிக்கு பைக்கில் வந்த 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனைதொடர்ந்து அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்த போலீசார், சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்த எச்சரித்து வாகனங்களை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

English summary
Thoothukudi Police warns the School students whom ride bikes without the legal age and license. As the accident rates are increasing in the city because of the students Police are in action now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X