For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர்: கிராம மக்கள் குற்றச்சாட்டு

போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

    தூத்துக்குடி: போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர் என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் 47 வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    தொடர் விடுமுறை என்பதால் நேற்றும் இன்றும் போராட்டத்தில் அதிகளவு பள்ளி குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    மாணவர்கள் ஆதரவு

    மாணவர்கள் ஆதரவு

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டு உறங்கி வருகின்றனர். கிராம மக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    தீவிரமடையும் போராட்டம்

    தீவிரமடையும் போராட்டம்

    அரசியல் கட்சிகளும் கையெழுத்து இயக்கங்களை நடத்துவதோடு முற்றுகைப் போராட்டத்தையும் அறிவித்துள்ளன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

    பராமரிப்பு பணி - மூடல்

    பராமரிப்பு பணி - மூடல்

    இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை 15 நாட்கள் மூடப்படுவதாக ஆலை நிர்வாகம் நேற்று அறிவித்தது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதிதான் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை தெரிவித்துள்ளது.

    போராட்டம் தொடரும்

    போராட்டம் தொடரும்

    தீவிரமடைந்துள்ள போராட்டத்தின் வேகத்தை குறைக்கவே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆலை நிரந்தரமாக மூடப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

    English summary
    Kumarettiyapuram Village people accuses that Thoothukudi Sterlite plant has been closed to dilute the protest. Protest against Sterlite continues as 47th day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X