For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவித்து மாணவ, மாணவிகள் மெளன ஊர்வலம்

Google Oneindia Tamil News

செங்கோட்டை: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், செங்கோட்டையில் பொது நல அமைப்புக்கள் சார்பில் முத்துசாமி பூங்காவிலிருந்து எஸ்.ஆர்.எம் பெண்கள் பள்ளி மாணவியர்கள், எஸ்.எம்.எஸ்.எஸ்.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்டவற்றைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட மெளன ஊர்வலம் நடைபெற்றது.

Thousands attend silent procession to condole the death of Kalam

இந்த ஊர்வலம் கீளபஜார், காவல்நிலையம், குலத்துமுக்கு, வம்பளந்தான் முக்கு, கேசி ரோடு, காந்தி ரோடு, தாலுகா அலுவலகம் வழியாக செங்கோட்டை பேருந்து நிலையம் வந்தது. பின்னர் அங்கு பத்திரிக்கையாளர்கள் சார்பில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செய்தனர்.

Thousands attend silent procession to condole the death of Kalam

இந்த ஊர்வலத்தை செங்கோட்டை நகரமன்ற தலைவர் மோகனகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நுகர்வோர் கூட்டமைப்பு மாநில செயலாளர் மணிமகேஸ்வரன், செய்தி தொடர்பாளர் சுப்பையா கோனார், நகரமன்ற துணைத் தலைவர் கணேசன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேலு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கிருஷ்ணமுரளி, நகரமன்ற உறுப்பினர்கள் திலகர், ஐயப்பன், செந்தில் ஆறுமுகம், சுந்தரம், பொதுநல அமைப்பின் தலைவர் லக்சோ ராமையா, செயலாளர் ரசீத் காதர், குமார், முன்னாள் துணைத்தலைவர் ஆதிமூலம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் ஞானராஜ், பத்திரிகையாளர்கள் கனியத்தா, இசக்கிராஜன், மகேஷ், முப்புடாதி, ராஜன், மாரிமுத்து, சங்கர், இசக்கிராஜ், ஆசிரிய, ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்காண பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Thousands attend silent procession to condole the death of Kalam
English summary
Thousands of people and students attended a silent procession to condole the death of Kalam in Senkottai today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X