For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலமேடு ஜல்லிகட்டு சீறிபாய்ந்த காளைகளை மடக்கிய வீரர்கள்: அவனியபுரத்தில் 35 பேர் காயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மாட்டுப் பொங்கலை ஒட்டி மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சீறிப்பாய்ந்த மாடுகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக பிடித்து வீரத்தை வெளிப்படுத்தினர்.

பாலமேட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு மறுநாள் ஜனவரி உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு விழா மஞ்சலாறு திடலில் இன்று காலை 7.45 மணிக்கு தொடங்கியது.

ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், வேலூர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 686 காளைகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல மாடு பிடி வீரர்கள் 623 பேர் பதிவு செய்யப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனை

மருத்துவ பரிசோதனை

ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 54 பேர் தள்ளுபடி செய்யப்பட்டு 569 வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

சீறிப்பாய்ந்த காளைகள்

உச்சநீதிமன்ற வழி காட்டுதலின்படி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் விலங்கியல் நலவாரியம் மேற்பார்வையில் 77 நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. வாடிவாசல் முன்பு தென்னை நாறு கழிவுகள் பரப்பி வைக்கப்பட்டு இருந்தது.

முதலில் கோவில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை மாடுபிடி வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன்பின்பு மற்ற மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப் பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர்.

தூக்கி எறிந்த காளைகள்

தூக்கி எறிந்த காளைகள்

சில மாடுகள் வீரர்களின் பிடியில் சிக்கிமாட்டியது. திமில் நிமிர்ந்த சில மாடுகள் வீரர்களை தூக்கி அலாக்காக வீசி எறிந்தது. இதில் பல வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

வீரர்களுக்கு பரிசு

வீரர்களுக்கு பரிசு

ஒரு மாட்டை ஒருவர் மட்டுமே மடக்கி பிடிக்க வேண்டும் அவருக்கு மட்டும் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் வீரர்கள் போட்டி போட்டு கொண்டு சீறி வந்த காளைகளை மடக்கி பிடித்தனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு பீரோ, கட்டில், வாஷிங் மெஷின், தங்க காசு, பட்டு வேட்டி, துண்டுகள், பண முடிப்புகள் பரிசாக வழங்கப்பட்டது. வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

வெளிநாட்டு பயணிகள்

வெளிநாட்டு பயணிகள்

இந்த ஜல்லிக்கட்டு விழாவை மதுரை மட்டுமல்லாது சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த காலரியில் அமர்ந்து பார்த்து ரசித்தனர். ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஜல்லிகட்டு விழாவை கண்டு ரசித்தனர்.

ஆளில்லா விமானம்

ஆளில்லா விமானம்

முதன் முறையாக ஜல்லிக்கட்டு விழாவை கண்காணிக்க ஆளில்லா விமானம் இன்று பயன்படுத்தப்பட்டது. காலை 7.30 மணி அளவில் இந்த ஆளில்லா விமானம் வானத்தில் பறந்து வட்டமிட்டு கண்காணித்தது. போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவனியாபுரத்தில் காயம்

அவனியாபுரத்தில் காயம்

தைத்திருநாளன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அண்டை மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த காளைகள் உள்பட மொத்தம் 338 காளைகள் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களம் கண்டன. வீர விளையாட்டின் போது காளைகள் தாக்கியதில் 35 பேர் காயமடைந்தனர்.

English summary
Thousands of spectators, including foreign tourists, thronged the venue to watch the traditional sport of bullfighting held as part of the Pongal festival. Hundreds of bulls from Madurai, Theni, Dindigul, Sivaganga, Salem, Pudukottai, Tiruchi, Thanjavur, Virudhunagar and Ramanathapuram districts took part in the event.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X