For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் தென்மாவட்ட துப்பாக்கிச்சூடுகள்.. பறிபோகும் அப்பாவி உயிர்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தென் மாவட்டங்களில் அரங்கேறியுள்ள 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தென் மாவட்டங்களில் அரங்கேறியுள்ள 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகும்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு முன் தமிழகத்தில் அரங்கேறிய போலீசாரின் அத்துமீறல்கள் குறித்த ஒரு தொகுப்பு..

மாஞ்சோலை தொழிலாளர்கள்

மாஞ்சோலை தொழிலாளர்கள்

1999 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது, காவல் துறை தடியடி நடத்தினர்.

17 பேர் பலி

17 பேர் பலி

இதையடுத்து தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.

6 பேர் பலி

6 பேர் பலி

கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் இம்மானுவேல் குருபூஜையின் போது பரமக்குடியில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி 10 பேர் பலி

தூத்துக்குடி 10 பேர் பலி

இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் சரமாரியாக தடியடி நடத்தியும் தாக்குதல் நடத்தினர். இதில் 10ஆம் வகுப்பு மாணவி உட்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மூன்று கொடூர சம்பவங்களுகம் நடந்தேறியிருப்பது தென் தமிழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Three police firing incidents happened in Southern Tamilnadu like Thoothukudi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X