For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.1 கோடி நஷ்ட ஈடு.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 பால் நிறுவனங்கள் கேஸ்!

ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தனியார் நிறுவனங்கள் வழக்கு தொடுத்துள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரக்கோரி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 3 தனியார் பால் நிறுவனங்கள் இந்த வழக்கை தொடுத்துள்ளன.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக குற்றம்சாட்டினார். பாலில் கலக்கப்படும் கெமிக்கலால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து என்றும் அவர் கூறினார்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பால் நிறுவனங்களின் விற்பனை சரிந்து வருவாய் இழப்பு ஏற்பட்டது.

ராஜினாமா செய்வேன்

ராஜினாமா செய்வேன்

பாலில் கலப்படம் இல்லை என்பது உறுதியானால் தூக்கில் தொங்குவேன், ராஜினாமா செய்வேன் என்றும் தெரிவித்தார். அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கலப்படம் இல்லை

கலப்படம் இல்லை

இந்நிலையில் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகள் ஆய்வுக்காக புனே மத்திய உணவு பாதுகாப்புத்துறைக்கு அனுப்பப்பட்டது. அதில் பாலில் கலப்படம் இல்லை எனத் தெரியவந்தது.

பால்பவுடரில் கலப்படம்

பால்பவுடரில் கலப்படம்

இதையடுத்து பால்பவுடரில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டினார். நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளையும் செய்தியாளர் சந்திப்பின் போது காட்டினார்.

நஷ்டஈடு தரக்கோரிக்கை

நஷ்டஈடு தரக்கோரிக்கை

இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடுதரவேண்டும் என 3 தனியார் பால் நிறுவனங்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடர்ந்துள்ளன.

English summary
Three private milk companies filed a case against Minister Rajendira balaji. Rajendira balaji was accusing Private milk companies mixing chemical in the milk.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X