For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் தமிழகத்தில் இடி, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் - 5 நாட்களுக்கு வானிலை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    தென் தமிழகத்தில் இடி, சூறைக்காற்றுடன் மழை பெய்யும் | Tamilnadu Weather report by Chennai Met office

    சென்னை: தமிழக உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மைய அறிக்கை கூறியுள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடல், மாலத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலடுக்கு சுழற்சியினால் 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய அறிக்கை கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

    Thunderstorm accompanied with gusty winds says met office Chennai

    ஏப்ரல் 7 முதல் 11 வரை மழை, வெப்பம், வானிலை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

    ஏப்ரல் 7ஆம் தேதியான இன்று வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும். தென் தமிழகத்தில் பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.

    ஏப்ரல் 8ஆம் தேதியான நாளை தமிழகம் புதுச்சேரியில் இடி, சூறைக்காற்றோடு கூடிய கனமழை பெய்யும். 9,10,11ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.

    வெப்பநிலையை பொறுத்தவரை பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்சமாக 27 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

    English summary
    Thunderstorm accompanied with gusty winds is likely to occur at isolated places over Tamil Nadu on 8th april said Chennai Met office.The sky condition is likely to be partly cloudy. Maximum and Minimum Temperature is likely to be around 34 and 27 deg Celsius respectively.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X