For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புளியரை அருகே நாயை அடித்து கொன்று புலி அட்டகாசம்.. பீதியில் பொதுமக்கள் !

புளியரை அருகே அட்டகாசம் செய்து வரும் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Google Oneindia Tamil News

செங்கோட்டை: புளியரை அருகே தோட்டத்தில் காவலுக்கு கட்டியிருந்த நாயை அடித்து கொன்று புலி அட்டகாசம் செய்து விட்டு தப்பியோடி விட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அந்த புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக, கேரள எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் புளியரை வனப்பகுதியிலும், குண்டாறு வனப்பகுதியிலும் சிறுத்தைகள், புலி உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

 Tiger kills dog

கடந்த சில நாட்களாக குண்டாறு பகுதியில் உள்ள சில தனியார் தேயிலை தோட்டத்தில் கட்டிப் போட்டிருந்த நாய்களை புலி கொன்று விட்டு தப்பியோடியது. இதனிடையே தொழுவத்தில் கட்டியிருந்த மாட்டையும் அடித்து கொன்றது.

புலியின் தாக்குதலில் குண்டாறு பகுதியில் உள்ள சில தனியார் தோட்டங்களில் கட்டிப் போட்டிருந்த நாய்களை கொண்டு தூக்கி செல்லும் நிகழ்வுகளும், மாட்டை கொன்று தின்று விட்டு சம்பவங்களும் நடந்து வருகின்றன. மேலும் தென்மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எக்கோ டூரிசம் சூழல் பார்க் அருகே கடந்த சில நாட்களாக சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பகுதியில் இரண்டு நாய்களை புலி தூக்கிசென்றது. மேலும் ராஜன் என்பவர் தனது தோட்டத்தில் காவலுக்காக வளர்த்து வந்த ஒரு நாயை புலி அடித்து கொன்று விட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் அங்கு வந்து காட்டுப்பகுதிக்குள் சென்று தேடிப்பார்த்தனர். இந்தநிலையில் தப்பி சென்ற புலியை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
tiger was Killed By Dogs near senkottai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X