For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்கா: ரூ40 கோடி லஞ்சம்- அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், ஜார்ஜூக்கு நெருக்கடி

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்கும்-சென்னை உயர்நீதிமன்றம்

    சென்னை: தடை செய்யப்பட்ட குட்காவை சட்டவிரோதமான விற்பனை செய்ய வியாபாரி மாதராவிடம் ரூ40 கோடி லஞ்சம் பெற்ற வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் மற்றும் சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    Timeline of TN Gutka scam

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய குட்கா ஊழல் வழக்கு விவரம்:

    • நாடு முழுவதும் குட்கா விற்பனைக்கு 2010-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது
    • தடையை மீறி பல மாநிலங்களில் குட்கா விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதன் மூலம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • 2016-ம் ஆண்டு ரூ100 கோடி வரி ஏய்ப்பு தொடர்பாக சென்னையில் குட்கா வியாபாரிகள் வீடுகள், குடோன்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் குட்கா வியாபாரி மாதவராவின் டைரி சிக்கியது.
    • மாதவராவின் டைரியில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய ரூ40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் எழுதப்பட்டிருந்தது.
    Timeline of TN Gutka scam

    • அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜ் ஆகியோருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதும் அதில் இருந்தது.
    • 2017-ல் குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கியவர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது.
    • தடையை மீறி குட்கா விற்பனை செய்யப்படுவதாக சட்டசபையில் ஸ்டாலின் புகார் தெரிவித்தார். குட்கா பொட்டலங்களை ஸ்டாலின் சட்டசபையில் எடுத்து காட்டினார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது.
    Timeline of TN Gutka scam

    • வருமான வரித்துறை அறிக்கை மீது சிபிஐ விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டது.
    • கடந்த ஓரண்டாக குட்கா விற்பனைக்கு லஞ்சம் பெற்றது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
    • குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கும் தொடர்ந்தார்.
    • குட்கா ஊழல் தொடர்பான வருமான வரித்துறை அறிக்கை திடீரென மாயமானதாக சர்ச்சை எழுந்தது.
    • மாயமான இந்த அறிக்கை 2018 ஜனவரியில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவில் சசிகலா அறையில் வருமான வரி சோதனையின் போது கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
    • குட்கா ஊழல் வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மஞ்சுநாதா திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
    • விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் ராஜேந்திரன், ஜார்ஜ்ஜை தப்ப வைக்கவே மஞ்சுநாதா இடம் மாற்றம் செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
    • இன்று குட்கா ஊழல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது.

    English summary
    The Timeline of TamilNadu Gutka scam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X