For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடை காலமும் மனது வைத்தால் குளிர்ச்சியாகலாம்... நமது புதுச்சேரி வாசகரின் கூல் டிப்ஸ்

வெயிலிலிருந்து காத்து கொள்வது குறித்து எளிய வழிகளை வாசகர் தருகிறார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவழியா நாம படாதபாடெல்லாம் பட்டு கத்திரிவெயிலை வழியனுப்பி வெச்சாச்சு. ஆனாலும் இந்த வெயிலும் அனலும் இன்னமும் பின்னி எடுக்குதே.. என்று புலம்பும் மக்களுக்கு நமது புதுச்சேரி வாசகர் ரேவதி சில தகவல்களை தந்துள்ளார். அவற்றினை உங்கள் முன் வைக்கிறோம்....

கோடையின் போது பூமியின் வட்டப்பாதையானது சூரியனுக்கு மிக அருகில் வரும். இதன் விளைவாகவே கோடையின் கத்திரி வெயிலானது தொடந்து 3 வாரங்கள் வரை நீடிக்கும். இதனாலேயே பகல் பொழுது நீண்டும், இரவு பொழுது மிக குறுகியதாகவும் உள்ளது. மனித உடலானது தற்வெப்ப நிலை கேற்ப தன்னை மாற்றும் விதமாய் அமைந்துள்ளது. காலையில் நடைபயிற்சி செய்வதால் சூரியனிலிருந்து வைட்டமின் டி கிடைக்கும். இதனால் காலையில் உடல் உற்சாகம் அடைந்து, சோர்வின்மை நீங்கும். உடலில் இரத்த ஒட்டம் அதிகரிக்கும், மூலையில் செயல்பாடுகள் பன்மடங்கு உயரும்.

பாரம்பரிய விளையாட்டு தேவை

பாரம்பரிய விளையாட்டு தேவை

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கோடை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை. காரணம் வெயிலின் தாக்கமே. குழந்தைகள் வெயிலில் பிற குழந்தைகளுடன் ஓடி விளையாடும்போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும், வெற்றி தோல்வியை பற்றிய ஒரு தெளிவும் வளரும். ஆனால் எப்போது பார்த்தாலும் கிரிக்கெட் விளையாடுவதைவிட, பெற்றோர்கள் நமது பாராம்பரிய விளையாட்டான கபடி, கோ கோ, நாடுபிடியாட்டம், பாண்டியாட்டம், குண்டு அடித்தல் , ஓடிபிடித்து, பம்பரம் போன்ற விளையாட்டுகளை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

ஏன் பருத்தி அணிகிறோம்?

ஏன் பருத்தி அணிகிறோம்?

பருத்தி ஆடைகளை அணிவதால், தூய்மையான காற்று உடலுக்குள் சென்று வர வசதியாக இருக்கும். வியர்வையை ஈர்த்து விடும். பாக்டிரியல் மற்றும் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும். உடல் குளிச்சியடையும். கோடை காலத்தின்போது பெரும்பாலானோர் இள வண்ண நிற ஆடைகளை அணிவது நல்லது. ஏனென்றால் சூரியனின் புற ஊதா கதிரானது உடலில் நேரடியாக படுவதை தவிர்க்கலாம். கருப்பு நிறக் குடைகளை வெயிலில் எடுத்துச் செல்வதால் சரும பிரச்சனைகள் குறையும். அத்துடன் குளிர்ந்த கண்ணாடிகளை அணிவதால் கண் எரிச்சலை தவிர்க்கலாம்.

மனநிறைவும், புத்துணர்ச்சியும்

மனநிறைவும், புத்துணர்ச்சியும்

குடும்பத்தோடு ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரேசங்களுக்கு சென்றுவந்தால் மனநிறைவும், உடல் புத்துணச்சியும் உண்டாக்கும். கர்நாடகாவில் உள்ள தான்தில்லி என்னும் காடுகளில் மலை ஏற்றம் போன்றவை மற்றும் படகு நதிகளில் நீர்வீழ்ச்சி சவாரி போன்றவை பிரபலமானது. நதி நீர்வீழ்ச்சிகளில் படகு சவாரி செய்து பாருங்கள். உடல் உழைப்பும், மன உற்சாகமும் மன வலிமையும் ஏற்படும். சாகச விளையாட்டுகளில் கோடை காலத்தின்போது ஈடுபடுவதால் உடலுக்கு பயிற்சி மட்டுமல்லாமல் வியர்வையும் வெளியேறுவதால் உடல் எடை குறைதல் ஏற்படும்.

அம்மையை தடுக்கும் நுங்கு

அம்மையை தடுக்கும் நுங்கு

கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஐஸ்கிரீம், கூல்டிரிங்க்ஸ் நிறைய சாப்பிடலாம் என்பதுதான். கோடை காலத்தின்போது பாதாம், பிஸ்தா போன்ற மில்க் ஷேக் குடிக்கலாம். சிட்ரஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடலாம். மாம்பழம், பைனாபிள், நுங்கு, வெள்ளரி போன்ற காய்கறிகளை உட்கொள்ளலாம். நுங்கு சாப்பிடுவதால் கண்டிப்பாக அம்மை நோய் வருவதை தடுக்கலாம். தர்பூசணியில் தொண்ணூறு சதவீதம் தண்ணீர் உள்ளதால் அதனை சாப்பிடும்போது வயிறு சம்மதமான அனைத்து பிரச்சனைகளும் வராமல் காக்கலாம். நீர்மோர், இளநீர் போன்ற பானங்களை அதிகளவு எடுத்துக் கொள்வது நல்லது. அதிகளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நன்மை.

கோடையும் வசந்தமாகும்

கோடையும் வசந்தமாகும்

விலைமதிப்பற்ற நம் உயிரை காத்துக் கொள்ள சில நூறு ரூபாய்களை செலவழிப்பது தவறில்லை. பருவ காலங்கள் என்பது இயற்கையின் அடிப்படை மாற்றம். இந்த மாற்றத்தில் கட்டுண்டு கிடப்பது மனிதர்கள் மட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளும்தான். இயற்கையின் மாற்றங்களை அதன் போக்கிலேயே போய் தன்வசமாக்கிவிட்டால் பருவகாலங்கள் எல்லாமே நமக்கு வரப்பிரசாதங்கள்தான். குறிப்பாக நம் அன்றாட பழக்கவழக்கத்தை சிறிது மாற்றிக் கொண்டாலே போதும், கோடை காலமும் குளிர்ச்சியாகலாம்...

English summary
Our Puducherry reader gives the tips to easily overcome the effect of sunlight if you change the habits slightly. She says that when children play with other children in sunlight, the spirit of giving away a clarity of success and failure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X