For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் - கஜவாகன சேவைக்கு குடை சமர்பணம்

திருச்சானூர் பத்மாவதி தயார் கோவிலில் கார்த்திகை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு 5 வெண்பட்டு குடைகள் சமர்பணம் செய்யப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின்போது இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டுதோறும், தாயாருக்கு வெண்பட்டு குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.

பிரமோற்சவத்தின் முக்கியமான விழாவான கஜவாகன சேவைக்காக வெண்பட்டு குடைகள் தாயாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன.

வெங்கடேசப் பெருமாளுக்கு ஆண்டுதோறும் பிரமோற்சவம் நடைபெறுவது போலவே, திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் புதன்கிழமை தொடங்கி, 9 நாள்கள் நடைபெறுகின்றது.

திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருச்சானூர் பத்மாவதி தாயார்

அலர்மேலு மங்காபுரம் என்றழைக்கப்படும் திருச்சானூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்மாவதி தாயார் வீதி உலா

பத்மாவதி தாயார் வீதி உலா

தொடர்ந்து இம்மாதம் 23ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய வேளைகளிலும் தாயார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

பிரம்மோற்சவ கொடியேற்றம்

பிரம்மோற்சவ கொடியேற்றம்

புதன்கிழயன்று உற்சவர் முன்னிலையில், தங்க கொடி மரத்தில் கஜ முத்திரை பதித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது 7 ராகங்கள் இசைக்கப்பட்டன. மேள தாளங்கள் முழங்க, வேத பண்டிதர்கள் வேதங்கள் ஓத, பிரம்மோற்சவ கொடியேற்ற நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

அம்மன் வீதி உலா

அம்மன் வீதி உலா

மாலையில் ஆந்திர அரசு சார்பில் அமைச்சர் அமர்நாத் ரெட்டி, பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கினார். இரவில் சின்ன சேஷ வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

குடைகள் சமர்பணம்

குடைகள் சமர்பணம்

இந்து தர்மார்த்த சமிதி சார்பில் ஆண்டுதோறும், பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின்போது தாயாருக்கு வெண்பட்டு குடைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டு வருகிறது.

அம்மனுக்கு பட்டு குடைகள்

அம்மனுக்கு பட்டு குடைகள்

இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்சானூருக்கு திருக்குடைகள் எடுத்து வரப்பட்டன. பத்மாவதி தாயார் கோயில் எதிரில் உள்ள வாகன மண்டபத்தில், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியிடம் இருந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு துணை செயல் அதிகாரி வெண்பட்டு குடைகளை பெற்றுக்கொண்டார்.

பட்டுக்குடையுடன் ஊர்வலம்

பட்டுக்குடையுடன் ஊர்வலம்


ஏழுமலையானுக்கு கஜவாகனம் போல பத்மாவதி தாயார் கஜவாகனத்தில் எழுந்தருளுவது சிறப்பு. இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்சானூருக்கு வருவார்கள்.
பிரமோற்சவத்தின் முக்கியமான விழாவான கஜவாகன சேவை நாளை நடைபெற உள்ளது.
இதனையொட்டி வெண்பட்டு குடைகள் தாயாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன.

திருப்பதி பிரம்மோற்சவம்

திருப்பதி பிரம்மோற்சவம்

அம்மன் வீதி உலாவின் போது இந்த குடைகள் அம்மனுக்கு நிழல் தரும். திருமலையில் ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் போதும் வெண்பட்டு குடைகள் சமர்பணம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tiruchanoor Karthigai Brahmotsavam starts from 15th November and ends on 23rd November. 19-11-2017, Sunday, Pallaki Utsavam, Gajavahanam.Hindu Dharmartha Samithi’, a group of devotees led by Hindu leader Gopalji brought a set of 5 umbrellas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X