For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேல்முருகனை 15 நாட்களுக்கு புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்பட்ட வேல்முருகன்

    தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் குண்டடிப்பட்டவர்களை நேரில் சந்திக்க சென்ற வேல்முருகன் கைது செய்யப்பட்டார். அவரை புழல் சிறையில் வைக்குமாறு திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

    Tirukovilur Court order to put Velmurugan in Puzhal for 15 days

    காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட கூடாது. அதன்படி கமல், ஸ்டாலின், திருமா ஆகியோர் தடையை மீறி தூத்துக்குடி சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    அதன்படி தூத்துக்குடிக்கு வந்த வேல்முருகனை விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் விழுப்புரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.

    அவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் புழல் சிறையில் அடைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேல்முருகன் காவிரி பிரச்சினைக்காக உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை தாக்கிய விவகாரத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    English summary
    Tirukovilur Court ordered to send Velmurugan in Judicial custody to Puzhal for 15 days for protesting against Sterlite.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X