For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எங்கள் மீது பாஜகவினருக்கு ஏன் இந்த எரிச்சல் தெரியுமா? திருமா பேட்டி

ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் முடிவெடுக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலை மேலும் தள்ளிப்போட்டால் அதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவே கருதவேண்டிவரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதவாத சக்திகளுக்கு எதிராக நவம்பர் 3ம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அதில் தான் பங்கேற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் சர்க்கரையின் விலையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஒரு கிலோ ரூ.13.50-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, நவம்பர் 1ஆம் தேதி முதல் கிலோ ரூ.25 என்ற விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விலை உயர்வு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

கட்சிக்கொடியை எரித்த பாஜக

கட்சிக்கொடியை எரித்த பாஜக

கரூரில் பாஜகவினர்தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்று கூறிய திருமாவளவன், உருட்டுக்கட்டையால் தாக்கியது பாஜகவினர்தான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை பாஜகவினர்தான் எரித்தனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

திருமாவளவன் ஆர்பாட்டம்

திருமாவளவன் ஆர்பாட்டம்

திராவிடர் கழகம், இஸ்லாமிய, கிறிஸ்தவ ஜனநாயக சக்திகளோடு விடுதலை சிறுத்தைகள் கை கோர்த்திருப்பதால் எரிச்சல் அடைந்திருப்பதாகவும் அவர் கூறினார். மதவாத சக்திகளுக்கு எதிராக நவம்பர் 3ம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும்,
கரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.

தேதி அறிவித்த பின்னர் முடிவு

தேதி அறிவித்த பின்னர் முடிவு

ஆர்.கே.நகர் தேர்தலை மேலும் தள்ளிப்போட்டால் அதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவே கருதவேண்டிவரும்
ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

விசிக முடிவு என்ன?

விசிக முடிவு என்ன?

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது, ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் வேட்பாளரை நிறுத்தினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வசந்தி தேவி போட்டியிட்டார் ஆனால் டெபாசிட்டை பறிகொடுத்தனர். இந்த நிலையில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளதால் விசிக எந்த கட்சிக்கு ஆதரவு தருமா? அல்லது களமிறங்குமா என்று தேர்தல் அறிவித்த பின்னர் முடிவெடுப்போம் என்று கூறியுளளார் திருமாவளவன்.

English summary
Viduthalai Siruthaigal party leader Tirumavalavan has said that press person at airport, after RK bypoll date announcement we will decide our decision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X