For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பிய நபர் கைது

Google Oneindia Tamil News

திருப்பத்தூர்: அண்மையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் மொத்தமாக சாலையில தொழுகையில் ஈடுபடுவதாக அவதுாறு பரப்பிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்..

திருப்பத்தூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஊரில் கொரோனா ஊரடங்கின் போது நள்ளிரவில் இஸ்லாமியர்கள் 700 பேர் திரண்டு சாலைகளில் தொழுகையில் ஈடுபட்டு வருவதாக ரவீந்திரன் (60 வயது) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் படங்களைப் பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

ஆனால் அந்தப் படங்கள் உண்மையான படங்களா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்ததால் ட்விட்டரில் திருப்பத்துார் மாவட்ட காவல்துறையை டேக் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

 tirupathur police arrested a man, who for allegedly spreading the fake news in social media

,இந்த விஷயம் திருப்பத்துார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து. ட்விட்டரில் பகிரப்பட்ட படங்கள் பற்றி போலீசாரிடம் விசாரிக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், 2018ம் ஆண்டு, உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் தொழுகை நடத்தப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலியாக படங்களைப் பகிர்ந்த ரவீந்திரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். ரவீந்திரனின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்தப் படங்கள் அகற்றினார்கள்.

மேலும், கொரோனா ஊரடங்கின் போது இதுபோன்ற வதந்தி பரப்பும் படங்களைப் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பத்துார் மாவட்ட காவல்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

English summary
picture shot in #allahabad is falsely shared in social media as one taken in tirupathur district. FIR has been registered against the miscreants
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X