For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூரில் பெண் காவலர்களை தாக்கிய வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் காவலர்களை தாக்கிய வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல்- வீடியோ

    திருப்பூர்: திருப்பூரில் பெண் காவலர்களை தாக்கிய வழக்கில் இருவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

    திருப்பூரில் கடந்த 2015-ஆம் ஆண்டு 28-ஆம் தேதி பெருமாநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோமதி, காவலர்கள் தீபா, சுதா மூவரும் கணக்கம்பாளையம் பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    Tiruppur Court gives judgement for 2 who attacks lady police

    அப்போது இருசக்கர வாகனத்தில் மது அருந்தி வந்த இருவரை நிறுத்தி விசாரித்த போது பெண் காவலர்களை ஆபாச வார்த்தைகளில் பேசி அவர்களை தாக்கினர். இந்த வழக்கில் மதுரை மாவட்டம் பெரியபட்டி பகுதியை சேர்ந்த ராம்குமார் (26), குமார் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல், பொது இடத்தில்ஆபாசமாக திட்டுதல், காயமேற்படுத்துதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆயுதம் கொண்டு கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு 2 வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந் நிலையில் நீதிபதி ஜியாவுதீன் இருவரையும் குற்றவாளி என அறிவித்து பெண்களுக்கு எதிரான பாலினக் கொடுமைகள் ஏற்படும் போதெல்லாம் பெண்கள் எப்படி நடக்க வேண்டும் என சொல்லும் சமூகம் ஆண்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என சொல்வதில்லை.

    [ கமல்ஹாசன் பொய் சொல்கிறார்.. அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ]

    ஆண்மை என்பதை தவறாக வரையருத்ததே இதற்கு காரணம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. இரவு 12 மணிக்கு காவலர்கள் சீருடையில் இருந்த பெண்களுக்கு எதிராக இவர்கள் பயன்படுத்திய தரக்குறைவான வார்த்தைகளை ஏற்க முடியாது.

    மரபு மனிதர்களை உருவாக்கவில்லை மனிதர்கள்தான் மரபை உருவாக்கியுள்ளார்கள் என கருத்து தெரிவித்த நீதிபதி, நிர்பயா வழக்கை சுட்டிக்காட்டி இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    English summary
    Tiruppur court gives judgement for the two who attacks lady police in 2015 while they were involved in vehicle raid.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X