For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருத்தணியில் தீயை கொட்டிய வெயில்..107 டிகிரி பாரன்ஹீட் பதிவு - முடங்கிய மக்கள்

திருத்தணியில் அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

Google Oneindia Tamil News

திருத்தணி: வெளியிலே தலைகாட்ட முடியாத அளவுக்கு 107 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு வெயில் கொளுத்தியதால் திருத்தணி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

கோடை காலம் தொடங்கிவிட்டதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதானல் பெரும்பாலான மாவட்டங்களில் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது.

Tirutani district recorded 107 degrees celsius

வழக்கமாக ஏப்ரல் மாத இறுதி வாக்கில்தான் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு பல நகரங்களில் கடந்த மாதம் முதலே 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

வேலூர், தருமபுரி, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று வெயிலின் அளவானது சதத்தை தொட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சில நாட்களாகவே கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிறன்ற 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சாலையில் நடந்து செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் தலையில் துப்பட்டாவை போர்த்தியவாறு சென்றனர். பெரும்பாலோர் வீசும் அனல்காற்றுக்கு அச்சப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர். இதனால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது

English summary
Tiruttani and surrounding areas today recorded the 107 degrees Celsius. As a result, public were severely hot. Most people were scared of the winds and were stuck out of the house. In the daytime, people walked down on roads.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X