For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் ஆட்சியர் அறிவுறுத்தல்!

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடி தாண்டி உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டு வந்தது. இதனால் கடலூர் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கடந்த 100 நாட்களாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்து

Tiruvannamalai Collector advised the people living on the banks of the Thenpennai river to be safe

மேலும் அணைக்கு தண்ணீர் வந்த வண்ணம் இருந்த நிலையில் இன்று மாலை அணையின் பிரதான மதகின் முக்கிய கதவு உடைந்து தண்ணிர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Tiruvannamalai Collector advised the people living on the banks of the Thenpennai river to be safe

திருவண்ணாமலையில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கே.ஆர்.பி. அணையில் பிரதான மதகு உடைந்துள்ளதால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiruvannamalai Collector advised the people living on the banks of the Thenpennai river to be safe

தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விழுப்புரம் கடலூர் உள்ளிட 5 மாவட்டங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

English summary
Tiruvannamalai Collector advised the people living on the banks of the Thenpennai river to be safe. Kirshnagiri collector also issued flood warning to the people. The main gate of the dam's main door broke down and the water flowed to the river.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X