For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.வின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை? டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

ஜெயலலிதாவின் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு எந்த நிலைமையில் போயஸ்கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற முதல் அறிக்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

TKS Elagovan raising question on Jayalitha medical report

அதில் ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சர்க்கரை அளவு 508 எம்ஜி இருந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுகவின் டிகேஎஸ் இளங்கோவன், ஜெயலலிதாவின் சர்க்கரை அளவு இவ்வளவு அதிகரிக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். சர்க்கரை அளவை கட்டுப்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது தாயார் நாள்தோறும் சர்க்கரை அளவை வீட்டிலேயே சோதித்துக் கொள்வதாக கூறிய டிகேஎஸ் இளங்கோவன், வீட்டிலேயே சுகர் அளவை கண்காணிக்கும் வசதியிருந்தும் ஏன் கண்காணிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தியிருந்தால் ஜெயலலிதாவின் உடல்நிலை இந்த அளவுக்கு பாதித்திருக்காது என்றும் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். ஜெயலலிதா மரணம் குறிம்மு விசாரிக்க ஸ்டாலின் சிபிஐ விசாரணை கோரியிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

English summary
TKS Elagovan raising question on Jayalitha medical report. Why did not try to control sugar levels in Jayalalithaa's body TKS Elagovan questioned .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X