For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து இன்று கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டம்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: திராவிடர் கழகம் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தை கண்டித்து இன்று(14.4.15) மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும்,தமிழர்களின் அடிமைச் சின்னமான கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டமும் நடைபெறும் என்று தமிழர் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.

பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே திராவிடர் கழகம் சார்பில் இன்று தாலி அகற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தை கண்டித்து தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமும், தமிழர்களின் அடிமைச் சின்னமான கருப்பு சட்டை கிழிக்கும் போராட்டமும் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TMK to stage black shirt tearing protest condemning DK

போராட்டத்தில் வழக்கறிஞர் பா. குப்பன்(35 ஆண்டுகள் திராவிடர் கழகத்தில் உழைத்து பின் வெளியேறி, 2009ம் ஆண்டில் இருந்து திராவிட இயக்கத்தின் தமிழ் இன விரோத போக்கை வெளிச்சம் போட்டு காட்டி வருபவர்) , சேகர்- மாவட்ட பொறுப்பாளர் தமிழர் முன்னேற்றக் கழகம், செல்வா பாண்டியர் - தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், புதுமலர் பிரபாகரன் - மறத்தமிழர் சேனை, அருகோ ஆசிரியர் எழுகதிர், கணேசன் - நிறுவனர் தலைவர் தமிழர் பேரரசு கட்சி, (முன்னாள் திராவிடர் கழகம் ) சி. பா. அருட்கண்ணனார் - தமிழர் சமூகம் , இராஜ்குமார் பழனிச்சாமி - தமிழர் பண்பாட்டு நடுவம், புதுவை அழகர் - தமிழர் களம், சூரிய பிரகாஷ் - தலைவர் உலக தமிழர் பாதுகாப்பு இயக்கம், வழக்கறிஞர் ச.செந்தில்குமார் - செயலாளர் மக்கள் மாநாட்டுக் கட்சி, திருமாறன் - மரபு வழி தமிழ் தேசிய தக்கார் அவையம், பெருமாள் தேவன், வழக்கறிஞர் பா. வேணுகோபால் தலைவர் தமிழ் தேசிய வழக்கறிஞர் மையம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போராட்டத்தில் பங்கேற்க விரும்புவோர் 99626560760, 9444805770 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

English summary
Tamilar Munnetra Kazhagam is conducting black shirt tearing protest condemning DK's Mangalyam removing ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X