For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. 91.3% பேர் தேர்ச்சி.. கலக்கிய அரசு பள்ளிகள்!

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    TN 12th result 2019: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. இன்று!

    சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. 12ம் வகுப்புக்கு மார்ச் 1 முதல் 19ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுக்க மொத்தம் 8.87 லட்சம் பேர் 12ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    TN 12th result 2019 announced: Full Details

    லோக்சபா தேர்தல் நடக்க இருந்ததால் எப்போதும் நடப்பதை விட மிக வேகமாக 12ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில்12ம் வகுப்பு பொதுத்தேர்வுவிற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது..

    பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். tnresults.nic.in , dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். அதேபோல் மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், கல்வித்துறை அலுவலகத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

    எப்போதும் போல இந்த அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை அளித்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.

    +2 பொதுத்தேர்வு முடிவுகள் விபரம்:

    • பிளஸ் டூ பொதுத் தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
    • மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி
    • மாணவிகள் 93.64 சதவீதம், 88.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி.
    • திருப்பூர் மாவட்டம் முதலிடம்
    • 95.37% மாணவ, மாணவிகள் திருப்பூரில் தேர்ச்சி
    • 95.23% மாணவ, மாணவிகள் ஈரோட்டில் தேர்ச்சி
    • 95.15% மாணவ, மாணவிகள் பெரம்பலூரில் தேர்ச்சி
    • 95.01% மாணவ, மாணவிகள் கோவையில் தேர்ச்சி
    • 94.97% மாணவ, மாணவிகள் நாமக்கல்லில் தேர்ச்சி
    • அதிகமாக கணிதத்தில் 96.25% பேர் தேர்வு
    • கணினி அறிவியல் பாடத்தில் 95.27% பேர் தேர்ச்சி
    • 1281 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது
    • அரசு பள்ளிகளில் 84.76% பள்ளிகளில் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது. அதன்படி 238 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.
    • அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.66% பள்ளிகளில் 100% தேர்ச்சியை பெற்றுள்ளது.

    English summary
    TN 12th result 2019: The result will be announced today morning at 9.30 AM.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X