For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் மைக், மேஜை உடைப்பு... 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பிய வரலாறு

சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மைக்குகள், மேஜைகள் உடைக்கப்பட்டன. திமுக உறுப்பினர் நடத்திய கலவரத்தைப் பார்த்து சபாநாயகர் அவையை விட்டு வெளியேறினார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ஆனால் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கோரி அதிமுக ஓபிஎஸ் அணியினரும் திமுக உறுப்பினர்களும் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இன்று வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று கூறி திமுக உறுப்பினர்கள் மேஜையில் ஏறி நின்றும் மைக்குகள், நாற்காலிகளை உடைத்தும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அதிமுக 2016ஆம் ஆண்டு அதிமுக தொடர்ந்து வென்ற போது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என்று ஜெயலலிதா கூறினார். அவரது மரணத்திற்குப் பிறகு அதே வரலாற்று சிறப்புகள் தொடர்கின்றன என்பதுதான் வேதனை.

ஜெ அணி - ஜா அணி

ஜெ அணி - ஜா அணி

எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. ஜா அணி, ஜெ அணி என்று பிரிந்தனர். எம்ஜிஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வராக பதவியேற்றார். ஜானகி அம்மாளை 99 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், ஜெயலலிதாவை 33 எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. சட்டசபையில் அப்போது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்த போது பி.எச்.பாண்டியன் சபாநாயகராக இருந்தார். மூத்த அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிந்தார்.

சட்டசபையில் கலவரம்

சட்டசபையில் கலவரம்

அந்த சமயத்தில் சட்டசபையில் கலவரம் ஏற்பட்டது. மைக்குகள் தூக்கி வீசப்பட்டன. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. இதனால் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜெயலலிதாவை ஆதரித்த 33 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆட்சி மிஸ்மிஸ்

ஆட்சி மிஸ்மிஸ்

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் குழப்பம் உருவானது. இதைத் தொடர்ந்து நம்பிக்கை ஓட்டெடுப்பில் ஜானகி அம்மாள் வெற்றி பெற்ற 2வது நாளில் அவரது ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அதே போல ஒரு வரலாறு மீண்டும் திரும்பியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்துள்ளனர். சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு

28 ஆண்டுகளுக்குப் பிறகு

இதனையடுத்து 28 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அ.தி.மு.க. மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு சோதனையை எதிர் கொள்கிறது. சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று கூடிய உடனேயே பெரும் அமளியுடன் தொடங்கியது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவினரும், அதிமுக ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். ஆனால் சபாநாயகர் இதனை நிராகரித்து விட்டார்.

திரும்பிய வரலாறு

திரும்பிய வரலாறு

திமுக பெண் எம்எல்ஏக்கள் இருக்கை மீது ஏறி சபாநாயகருக்கு எதிராக முழக்கமிட்டனர். பல திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர். இந்த நிலையில் பல சபாநாயகரின் இருக்கையில் இருந்த மைக்கை உடைத்தனர். ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க செல்வம் சபாநாயகர் இருக்கை மீது ஏறி அவரை தள்ளினார். இதனையடுத்து சபாநாயகரை பாதுகாப்பாக அவைக்காவலர்கள் அழைத்துச் சென்றனர். பேரவை செயலாளர் ஜமாலுதீன் மைக்குகள் உடைக்கப்பட்டன. அதிமுக இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற வரலாறு மட்டுமல்ல, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த கலாட்டாக்களும் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்பியுள்ளன.

English summary
Tamil Nadu Assemby has seen the second worst clash in 28 years today after 1988. TN assembly on Saturday, when DMK and OPS cadres hurled chairs and demanded the floor test be put off.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X