For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சரவை விரிவாக்கம்: தமிழக பாஜக கூட்டணி கட்சிகளுக்கு மீண்டும் "நாமம்"

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: மோடி அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட அளிக்கப்படவில்லை.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றபோது தமிழக பாஜக கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு தான் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. இதனால் கூட்டணி கட்சிகளான பாமக, தேமுதிக ஆகியவை ஏமாற்றம் அடைந்தன. இந்நிலையில் மோடி தனது அமைச்சரவையை விரிவுபடுத்துகிறார் என்ற தகவல் வெளியானது.

TN BJP allies shown door in Modi's cabinet

இதை கேட்டு பாமக, தேமுதிக மகிழ்ச்சி அடைந்தன. இம்முறை தங்களுக்கு பதவி கிடைக்கும் என்று பாமக பெரிதும் நம்பியது. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனக்கு இம்முறை மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் இன்று விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் தமிழக பாஜக கூட்டணி கட்சிகளுக்கு ஒரு பதவி கூட அளிக்கப்படவில்லை.

இதனால் பாமக பெறும் ஏமாற்றம் அடைந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜகவை இழுத்தடித்த சிவசேனாவை சேர்ந்த சுரேஷ் பிரபுவுக்கு கேபினட் அமைச்சர் பதவி அளித்துள்ளார் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுரேஷ் சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

English summary
TN BJP allies haven't got even a single post in Modi's cabinet which has been expanded today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X