For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிராமணர் பிரஷாந்த் கிஷோரிடம் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கையா? ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரசாந்த் கிஷோருடன் இணைந்த திமுக... இனி என்ன நடக்கும்? | Prashant Kishor’s I PAC will help DMK

    சென்னை: சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து திமுக பணியாற்றும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

    மு.க.ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து திமுக பணியாற்றும் என அறிவித்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு விவாதப் பொருளாகி உள்ளது.

     TN BJP slams DMK for teams up with Prashant Kishor

    ஸ்டாலினின் ட்வீட்டுக்கு பதில் கொடுத்திருக்கும் தமிழக பாஜக, இந்து விரோத கொள்கை, பிரிவினைவாதம், விஞ்ஞான ஊழலின் ஊற்றுக்கண் என பல பேர்பெற்ற தலைவர்களால் கட்டமைக்கபட்ட @arivalayam ஒரு சர்வாதிகாரியாக @mkstalin இருந்தும் கட்டுப்படுத்த வழியின்றி புதிய முயற்சியாய் பிராமணர் பிகேயார் காலடியில் சரணடைவது தொண்டர்கள் மேல் உள்ள அவநம்பிக்கை தான் காரணமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

    பாஜகவின் இந்த பதில் ட்வீட்டுக்கு கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதில் @Zahurbhai என்ற ட்வீட்டிஸ்ட், #அமித்ஷா என்கிற ராஜதந்திரி(அப்படினு #பாஜக சொல்லிக்கொள்கிறதே தவிர மக்கள் கிடையாது) உடன் இருந்தும் உங்க #மோடி ஏன் பிகேயார் காலடியில் சரணடைந்து தேர்தலை சந்தித்தார்? #பாஜக தொண்டர்கள் மீது / #அமித்ஷா மீது ஏற்பட்ட அவநம்பிக்கை தான் காரணமா? என எதிர்கேள்வி எழுப்பியுள்ளார்.

    English summary
    Tamilnadu BJP has slammed DMK for teams up with Prashant Kishor for Assembly Elections 2021.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X