For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் 2.. மதுரை, தேனி, நெல்லை என முதல் கட்டமாக 12.. பாஜகவின் முதல் லிஸ்ட்!

Google Oneindia Tamil News

TN BJP ticks off 12 constituencies as 'safe seats'
சென்னை: இதுவரை 12 தொகுதிகளை பாஜக வெற்றித் தொகுதிகள் என அடையாளம் கண்டு பட்டியல் போட்டு வைத்துள்ளதாம். இந்தத் தொகுதிகளில் பாஜக போட்டியிட தீர்மானித்துள்ளதாம்.

கூட்டணி சேருவதைப் பொறுத்து இதற்கு மேலும் போட்டியிடுமா அல்லது இத்துடன் முடித்துக் கொள்ளுமா என்பது முடிவாகுமாம்.

தமிழகத்தில் வலுவான கூட்டணிக்காக கடுமையாக முயற்சித்து வருகிறது பாஜக. தேமுதிக, பாமக, மதிமுக என்று மெகா கூட்டணியை அமைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வந்தது பாஜக.

இதில் மதிமுகவை இழுத்து விட்டனர். தேமுதிக நிலை திரிசங்கு சொர்க்கமாக உள்ளது. பாமக வராது என்பது உறுதியாகி விட்டது. ஒரு வேளை தேமுதிக வராவிட்டால் பாமக இடம் பெறலாம். ஆனால் பாமகவுக்காக தேமுதிகவை கைவிட பாஜக தயாராக இல்லை என்பதால் அதற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயம், தேமுதிகவை திமுக கவர்ந்து விட்டால், பாமகவுக்கு உள்ளே வர வாய்ப்பு கிடைக்கும்.

இந்த நிலையில் ஒருபக்கம் கூட்டணிக்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில் மறுபக்கம் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளை அடையா்ளம் காணும் பணியையும் பாஜக முடுக்கி விட்டுள்ளது.

முதல் கட்டமாக 12 தொகுதிகளை தமிழக பாஜக அடையாளம் கண்டுள்ளதாம். அதாவது தென் சென்னை, வட சென்னை, கன்னியாகுமரி, பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, மதுரை, தேனி, நெல்லை என மொத்தம் 12 தொகுதிகளை முதல் கட்டமாக தேர்வு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர முடிவாகியுள்ளது.

கூட்டணி அமைவதைப் பொறுத்து 12 தொகுதிகள் மட்டுமா அல்லது கூடுதலாக போட்டியிடுவதா என்பதை பாஜக முடிவு செய்யுமாம்.

English summary
TN BJP has ticked off 12 constituencies as 'safe seats' in the state to contest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X