For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட்: 2016 -17 நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ஸ்கூட்டர்கள் இலவசம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: இந்த நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று சட்டசபையில் நிதியமைச்சர் தமிழக சட்டசபையில் 2016 -17ம் ஆண்டுக்கான திருத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

அதிமுக அரசு மீண்டும் 2 வது முறை பொறுபேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும். அமைச்சர் பன்னீர் செல்வம் 7 வது முறை பட்ஜெட் செய்துள்ளார்.

TN budget 2016-17: 1000 free Three-wheel scooter for physically challenged

பட்ஜெட் தாக்கல் செய்து பேசிய அவர் கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.351 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். மேலும் தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.24,130 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.3,679 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ422 கோடி செலவில் 2,673 வீடுகள் காவலர்களுக்கு கட்டித் தரப்படும் என அறிவிக்ப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஓராண்டில் 5.35 லட்சம் லேப்டாப்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். அடுத்த ஓராண்டில் 3.50 லட்சம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டிற்கு மின்சார மானியத்திற்காக ரூ.9,007 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ396.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி மாணவ, மாணவி கள், பணிபுரிபவர்கள் மற்றும் சுய தொழில் புரி வோர், வீட்டிலிருந்து எளிதில் கல்வி நிலையங்களுக்கும், பணிபுரியும் இடங்களுக்கும் சென்று வர அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பேட்டரியால் இயங்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட மூன்று சக்கர மோட்டார் வாகனங்களுக்கு மாற்றாக பெட்ரோலில் இயங்கும் இணைப்புச் சக் கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா ஸ்கூட்டர்கள் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

2011-2012 ஆம் நிதியாண்டில் 2 கோடி ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 400 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2012-2013ம் நிதியாண்டில் 2 கோடி ரூபாய் செலவில் 370 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 2013-2014 ஆம் நிதியாண்டில் 5 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 985 பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 2014-2015 ஆம் நிதியாண்டில் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட 969 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 2016 -17ம் நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு 1000 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

English summary
O.Panneerselvam told in assembly government will plan to distribute 1000 three-wheel scooters among all eligible physically challenged persons in 2016 - 17 financial year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X