விவசாயிகளுக்கு ரூ. 7,000 கோடி பயிர்க் கடன்... பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு #TNBudget

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழக அரசின் 2017 - 18ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதேபோல், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமாருக்கும், இதுமுதல் பட்ஜெட்டாகும்.

இந்நிலையில் 2017 - 18ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அப்போது குற்றவாளி சசிகலா பெயரை குறிப்பிடுவதா? என்று கூறி திமுக எம்.எல் .ஏக்கள் அமளியில் ஈடுப்ட்டனர். மேலும் சசிகலா , தினகரன் பெயர்களை அவைகுறிப்பில் இருந்து நீக்க ஸ்டாலின் வலியுறுத்தினார்.

TN Budget : 7000 crores allocated for farmers

இதனைத்தொடர்ந்து பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். அதன் விவரம் :

*2018 மார்ச் மாதம் தமிழகத்தின் கடன் 3,14,366 கோடி ரூபாய். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இந்த கடன் தொகை 20.90 % இருக்கும் என்பதால், அனுமதிக்கப்பட்ட 25% அளவிற்கு உட்பட்டே இருக்கும், அதனால் கடன் கட்டுப்பாட்டுக்குள்ளே உள்ளது

*தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5% இல் இருந்து 7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

* தமிழக அரசின் கடன் ரூ.1 லட்சம் கோடி அதிகரிப்பு.

*பால்வளத்துறைக்கு ரூ.130 கோடி, மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு.

*வணிகவரி மூலம் ரூ77,234 கோடி வருவாய் கிடைக்கும்

*நீராதார மேலாண்மை,வறுமை ஒழிப்பு தூய்மை தமிழ்நாடு ஏழைகளுக்கு வீட்டுவசதி உள்ளிட்ட நோக்கங்கள் அடிப்படையில் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

*கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை.

* நீதி நிர்வாக துறைக்கு 984 கோடி ஒதுக்கீடு, வருவாய் துறைக்கு 5695 கோடி ஒதுக்கீடு

* சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு 532 கோடி ஒதுக்கீடு.

* 16-17 ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி 7.94 இருந்து உயர்ந்து 17-18 ல் 9 % ஆக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது

*2017-18 ஆண்டில் ஊரக வறுமை ஒழிப்பிற்கு 469 கோடியும், நகர்புர வறுகை ஒழிப்பு திட்டத்திற்கு 272.12 கோடி ஒதுக்கீடு

*10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் குடியிருப்புகளுடன் அமைக்கப்படும்.

இது போன்ற பல அம்சங்களை பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார் .

இதற்கிடையே அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி சண்முகம், டாக்டர்.விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி சென்றிருப்பதால் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
7000 crores allocated for farmers 2017- 18 TN Budget. finance minister Jayakumar today submitted the budget in the Tamilnadu assembly
Please Wait while comments are loading...