For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு பேருந்து கட்டணங்கள் 60% உயர்வு... அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

அரசு பேருந்து கட்டணங்கள் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!

    சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களில் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. தினந்தோறும் சுமார் 2 கோடி பேர் தமிழக அரசின் பேருந்து சேவையால் பயனடைந்து வருகின்றனர்.

    ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசு பேருந்துகளின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சம் ரூ25

    அதிகபட்சம் ரூ25

    சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்சமாக ரூ.3 உள்ள கட்டணத்தை ரூ.5 ரூ-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயருகிறது. அதிகபட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும்.

    நடுத்தர மக்கள் பாதிப்பு

    நடுத்தர மக்கள் பாதிப்பு

    இந்த திடீர் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பேருந்து கட்டணங்கள், மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளது கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் இந்த பேருந்துகளின் கட்டண உயர்வால் கூலித் தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

    டீசல் விலை உயர்வு

    டீசல் விலை உயர்வு

    பேருந்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, எரிப்பொருள் விலையேற்றம், பராமரிப்பு செலவு ஆகியவற்றால் கட்டணம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கூறுகிறது. இந்த கட்டண உயர்வால் மற்ற பொருட்களின் விலை கடுமையாக ஏற வாய்ப்புள்ளது.

    கடனை எங்கள் தலையில் சுமத்தலாமா?

    கடனை எங்கள் தலையில் சுமத்தலாமா?

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை வழங்குவதற்காக அந்த சுமையை ஏழை, எளிய மக்களின் தலையில் சுமர்த்துவது என்ன நியாயம். இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்த வழி வகுக்கும் என்று தெரிவித்தனர்.

    English summary
    Tamilnadu Government has increased the MTC and moffusil bus prices upto 66 percentage. People opposes to this and demands to get back the price hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X